தேர்தல் ஆணைக்குழுவில் 3,821 முறைப்பாடுகள் | தினகரன்


தேர்தல் ஆணைக்குழுவில் 3,821 முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 3,800க்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கடந்த மாதம் 8ஆம் திகதியிலிருந்து நேற்று பிற்பகல் மாலை 4.00வரை 3,821முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 27முறைப்பாடுகளும் மற்றும் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் 3,687முறைப்பாடுகளும் அவற்றுள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் 92 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவை அனைத்தும் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


Add new comment

Or log in with...