வாழ்வுரிமையை உறுதி செய்ய தவறாது வாக்களியுங்கள் | தினகரன்


வாழ்வுரிமையை உறுதி செய்ய தவறாது வாக்களியுங்கள்

வாக்குரிமை என்ற எமது வாழ்வுரிமையை உறுதி செய்வதற்கு தவறாது அனைவரும் வாக்களிக்க வேண்டுமென இந்து குருமார் அமைப்பு தமிழ் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்து குருமார் அமைப்பின் தலைவர் சிவஸ்ரீ கே.வி.கே. வைத்தீஸ்வர குருக்கள் அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்களே, எம் அனைவருக்கும் வாக்குரிமை என்பது எமது வாழ்வுரிமையாகும். இதனை நாம் எமது சமுதாய கடமையாக எண்ணி செயல்படவேண்டும். நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலும் எமது உரிமையை செம்மையாக பயன்படுத்த வேண்டும். எமதும், எமது சமுதாயத்தினதும், உரிமைகளைக் கருதி, செல்லுபடியாக்க கூடிய வண்ணம் எமது வாக்குரிமையாக கருதப்படும் வாழ்வுரிமையை தவறாது, கண்டிப்பாக பயன்படுத்தி பயன்பெறுமாறு வேண்டுகின்றோம்.


Add new comment

Or log in with...