தேர்தல் கண்காணிப்பில் 12,000 கண்காணிப்பாளர்கள் | தினகரன்


தேர்தல் கண்காணிப்பில் 12,000 கண்காணிப்பாளர்கள்

பெப்ரல், கபே மற்றும் வன்முறைகளை கண்காணிக்கும் மத்திய நிலையத்தின் சார்பில் நாடு முழுவதும் 12,000பேர் ஜனாதிபதித் தேர்தலை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பெப்ரல் அமைப்பின் சார்பில் 5,000பேரும், தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் மத்திய நிலையத்தின் சார்பில் 4,000பேரும்,கபே அமைப்பின் சார்பில் 2,200பேருமாக பல்வேறு அமைப்புகளின் சார்பில் சுமார் 12,000பேர் வரை தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சியிடம் வினவிய போது,

பெப்ரல் அமைப்பின் சார்பில் 4,000பேர் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைககளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வாக்குச் சாவடிகளில் மாத்திரம் 3,000பேர் கண்காணிப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அத்துடன் வாக்குச் சாவடிகளில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு தேர்தலை கண்காணிக்கும் அமைப்பான எமக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. என்றாலும், உடனடியாக தேர்தல்கள் ஆணைக்குழுவும் பொலிஸாரும் நடவடிக்கையெடுப்பதற்கான அறிக்கைகளையும் செயற்பாடுகளையும் எம்மால் செய்ய முடியும்.

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்த காலப் பகுதியில் வேட்பாளர்களின் பிரசார விளம்பரங்களை மேற்கொள்வதை இடைநிறுத்துமாறு பெப்ரல் அமைப்பு பேஸ்புக் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் மறைமுகமாக அல்லது வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் செயற்படுவதை தவிர்க்குமாறு அனைத்து தரப்பினர்களிடம் கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலை கண்காணிக்க சுமார் 17நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்தியா, பூட்டான், மாலைத்தீவு, தென் கொரியா, தென்னாபிரிக்கா, பிலிபைன்ஸ் மற்றும் இந்தோனேசியா நாடுகளை சேர்ந்த கண்காணிப்பாளர்கள் நாட்டுக்கு வருகைந்துள்ளனர்.

இவர்கள் ஒருவார காலத்திற்கு நாட்டில் தங்கியிருப்பார்கள்.

சுமார் 200 க்கும் அதிகமான வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் தேர்தலை கண்காணிக்க உள்ளனர். என்பிரல் அமைப்பு, ஐரோப்பிய ஆணையகம் உள்ளிட்ட வெளிநாட்டு கண்காணிப்பு அமைப்புகளை சேர்ந்த கண்காணிப்பாளர்களும் நாட்டுக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 


Add new comment

Or log in with...