ஜனாதிபதிக்கு “சேவா பிரசாதனி’ சேவை நலன் பாராட்டு | தினகரன்


ஜனாதிபதிக்கு “சேவா பிரசாதனி’ சேவை நலன் பாராட்டு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு“சேவா பிரசாதனி” சேவை நலன் பாராட்டு விழா நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் நோக்குடன் ஜனாதிபதியின் பணிக்குழாமினரால் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பொதுமக்களின் நலனுக்கான விசேட வேலைத்திட்டங்கள் பலவற்றை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட நாட்டுக்கும் மக்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த

ஐந்து வருடகாலமாக நிறைவேற்றிய செயற்பணிகளை பாராட்டும் வகையில் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்னவினால் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேன, வட மத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்டோரும் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் ஆளணியினரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.


Add new comment

Or log in with...