மாலியில் (மினுஸ்மா) ஐக்கிய நாடுகள் சபையின் பல பரிமாண ஒருங்கிணைந்த உறுதிப்படுத்தல் மிஷனில் பணியாற்றவுள்ள இலங்கை இராணுவத்தின் கம்ட் கான்வே நிறுவனத்தின் (சி.சி.சி) 243இராணுவ வீரர்களின் புதிய அணி நேற்று முன்தினம் இலங்கையிலிருந்து அமைதி காக்கும் பணிகளுக்காக புறப்பட்டுச் சென்றது.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இராணுவ உயரதிகாரிகள் விமான நிலையத்திற்கு சென்று அமைதி காக்கும் பணிகளுக்காக செல்லவிருந்த 13இராணுவ அதிகாரிகள் மற்றும் 223இராணுவ படை வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.
இதேபோல், ஏற்கனவே மாலிக்கு அமைதி காக்கும் பணிகளுக்காக சென்ற முதலாம் கட்ட இராணுவ வீரர்கள் நேற்று (14) ஆம் திகதி இலங்கைக்கு வந்தனர்.
Add new comment