அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து வாக்களிப்போம் | தினகரன்


அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து வாக்களிப்போம்

இலங்கையின் 08ஆவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான முக்கியமானதோர் தேர்தல் நடைபெற இருக்கின்றது என்பதை நாம் யாவரும் அறிவோம். இந்த சந்தர்ப்பத்தில் எமது தாய்நாடாம் இலங்கையில் வாழும் முஸ்லிம்களாகிய நாம் மிகவும் பொறுப்புடனும் பிரார்த்தனையுடனும் அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்தவர்களாகவும் எமது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டியது வாக்காளர்களாகிய எம் ஒவ்வொருவரினதும் தார்மீகப் பொறுப்பாகும். 

அதேவேளை அல்லாஹ்வுடைய நாட்டப்படி யார் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுகிறாரோ அவரை ஏற்றுக்கொள்வதும் பொறுந்திக்கொள்வதும் அல்லாஹ்வுடைய தீர்ப்புக்கு நன்றி செலுத்துவதும் எமக்கு அவசியமாகும். 

எனவே,  நம் நாட்டிலே வாழக்கூடிய சகல இன மக்களையும் அரவணைத்து நற்சேவை செய்யக்கூடிய நாட்டை அபிவிருத்திப் பாதையில் நல்லமுறையில் முன்னெடுத்துச் செல்லத்தக்க, நாட்டின் சாந்தி, சமாதானம், ஐக்கியம் நிலவ துணைபுரியக்கூடிய சிறந்த ஜனாதிபதி ஒருவரை அல்லாஹ் தெரிவுசெய்து தர வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அன்றைய தினம் பின்வருவனவற்றின் மூலம் அல்லாஹ்வை நெருங்குவோம். 

அதாவது   அனைவரும் அன்றைய தினம் நோன்பு நோற்போம். 

தஹஜ்ஜுத் வேளையில் எழுந்து தொழுது இஸ்திஃபார் செய்து கண்ணீர் வடித்து மனமுருகி அல்லாஹ்விடம் --------------உருக்கமாக பிரார்த்திப்போம். 

வாக்குச்சாவடிக்கு செல்ல முன்னர் இரண்டு நபில் (இஸ்திகாரா) தொழுவோம். அல்லாஹ்விடம் பிரார்த்தனையின்ஒழுங்கு விதிகளை பேணி பின்வருமாறு பிரார்த்திப்போம்.  

யாஅல்லாஹ்!   மகத்தான உன்னுடைய கருணையை வேண்டுகின்றேன். ஏனெனில் நீ எல்லாக் காரியங்களுக்கும் சக்தி பெற்றவன். நீ அனைத்தையும் அறிந்திருக்கின்றாய். நீதான் மறைவானவற்றை நன்கறிந்தவன். 

யா அல்லாஹ்!   நான் யாருக்கு வாக்களிக்கப் போகின்றேனோ அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவது எமது மார்க்கத்திற்கும்  எமது உலக வாழ்விற்கும் எமது கருமங்களின் நல்ல முடிவிற்கும், நாட்டின் அபிவிருத்தி ஒற்றுமை, சாந்தி சமாதானம் என்பனவற்றிற்கும் நல்லதென நீ அறிந்திருந்தால் அவரை எமக்கு ஜனாதிபதியாக தெரிவுசெய்து தந்தருள்வாயாக அவர் மூலம் எமக்கு பரக்கத்தும் செய்வாயாக. 

மேலும் யா அல்லாஹ், நான் இன்று யாருக்கு வாக்களிக்கப் போகின்றேனோ அவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுவது எமது மார்க்கத்திற்கும் எமது உலக வாழ்விற்கும் எமது கருமங்களின் நல்ல முடிவிற்கும் நாட்டின் அபிவிருத்தி, ஒற்றுமை, சாந்தி, சமாதானம் என்பவற்றிற்கும் நல்லதல்ல என நீ அறிந்திருந்தால் எவர் நல்வலர் என நீ அறிந்துள்ளாயோ அவரை தெரிவுசெய்து தந்தருள்வாயாக. பின்னர் அவரை பொறுந்திக்கொள்ளவும் அவர் மூலம் நிம்மதி பெறவும் நாடு அபிவிருத்தி அடையவும் எமக்கு அருள்புரிவாயாக என்று பிரார்த்திப்பதன் மூலம் சிறந்த ஒருவரை தெரிவுசெய்து தரும் பொறுப்பை அல்லாஹ்விடமே சாட்டுவோம். ஹஸ்புனல்லாஹு வ நிஃமல் வகீல். 

வாக்குச் சாவடிக்கு தவறாமல் உரிய நேரத்தில் சென்று ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ பில்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹ்” கூறியவர்களாக மிகச் சரியாக வாக்களிப்பை நிறைவுசெய்வோம். 

பின்னர் சிறந்த முடிவை அல்லாஹ்விடம் எதிர்பார்த்திருப்போம் அமைதி பேணுவோம்.  

அல்லாஹ் தரும் முடிவை பொருந்தி நன்றி செலுத்துவோம்.  

மௌலவி எம்.ஏ.எம். இப்ழால் (பாரி)  
மேல் மாகாண ஆசிரிய ஆலோசகர்  


Add new comment

Or log in with...