சபரிமலைக்கு 16ஆம் திகதி மீண்டும் செல்வேன் | தினகரன்


சபரிமலைக்கு 16ஆம் திகதி மீண்டும் செல்வேன்

கடந்த ஆண்டு திருப்பி அனுப்பப்பட்ட திருப்தி தேசாய் சவால்

கடந்த ஆண்டு கள்ளத்தனமாக சபரிமலைக்கு செல்ல முயன்ற திருப்தி தேசாய், பாதி வழியில் தடுத்து திருப்பி அனுப்பப்பட்டார். இந்நிலையில் இந்த ஆண்டு நவ.16 அன்று மீண்டும் சபரிமலை செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என 2018 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமனற்ம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் மீதான விசாரணை முடிந்த நிலையில், திகதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு நேற்று இறுதி தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. மேலும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்​ே அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லலாம் என்ற நிலையே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள திருப்தி தேசாய், நீதிமன்ற உத்தரவு வரும் வரை பெண்கள் சபரிமலைக்கு செல்லலாம். அதனை யாரும் தடுக்க முடியாது. சிலர் கூறுவது போல் பாலின பாகுபடுத்துவது தவறு. நவம்பர்16 ம் திகதி நான் சபரிமலைக்கு சென்று வழிபாடு நடத்த உள்ளேன் என்றார்.

கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய 2 வாரங்களுக்கு பிறகு நவம்பர் மாதம் சபரிமலைக்கு கள்ளத்தனமாக செல்வதற்காக புனேயில் இருந்து வந்த திருப்தி தேசாய், திருவனந்தபுரம் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். பக்தர்கள் மற்றும் ஐயப்ப சேவா சங்கத்தினர் போராட்டம் காரணமாக, விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாமல் விடிய விடிய காத்திருந்த திருப்தி தேசாயை, வலுக்கட்டாயமாக பொலிஸார் திருப்பி அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

திருப்தி தேசாய் சபரிமலை செல்வதற்கு காங்கிரஸ் மற்றும் பாஜ.கவினர் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...