சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி | தினகரன்


சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி

வழக்கை பெரிய அரசியல் அமர்வுக்கு மாற்ற பரிந்துரை

சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மீதான மறுஆய்வு மனுக்களை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, வழக்கை பெரிய அரசியல் அமர்வுக்கு மாற்றம் செய்து பரிந்துரை செய்துள்ளனர்.

அதாவது வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், ஏ.எம். கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இந்த வழக்கு விசாரணையை 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி பரிந்துரை செய்தனர்.

அதே சமயம், இரு நீதிபதிகள் ஆர்.எப். நாரிமன், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளிக்கும் வரை அனைத்து மறுஆய்வு மனுக்களும் நிலுவையில் இருக்கும் என்றும் சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற நிலையே தொடரும் என்றும் தங்களது உத்தரவில் குறிப்பிட்டனர்.


Add new comment

Or log in with...