MCC, SOFA, ACSA ஒப்பந்தங்கள் தொடர்பில் ஜன. 31 விசாரணை | தினகரன்


MCC, SOFA, ACSA ஒப்பந்தங்கள் தொடர்பில் ஜன. 31 விசாரணை

MCC, SOFA மற்றும் ACSA ஒப்பந்தங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுக்கப்படும்.

நீதியரசர்கள் புவனேக அலுவிகாரை, எல்.டி.பி. தொங்தெனிய, முர்கு பெர்னாண்டோ, எஸ். துரைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் முன்னிலையில் இந்த அடிப்படை உரிமை மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே மேலதிக விசாரணையை எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதிக்கு எடுப்பதற்கு தீர்மானித்துள்ளது.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் சட்டத்தரணி தர்ஷன வேரவெகே ஆகியோர் மேற்படி மூன்று அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். MCC, SOFA மற்றும் ACSA ஆகிய ஒப்பந்தங்கள் தொடர்பாக எந்தவொருவரும் எடுக்கும் அங்கீகாரம் மற்றும் தீர்மானங்களை இடை நிறுத்துமாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்று மனுதாரர்கள் மேற்படி மனுக்களில் கேட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...