ஐ.தே.க. ஆட்சியிலே மக்களுக்கு முழு சுதந்திரம்! | தினகரன்


ஐ.தே.க. ஆட்சியிலே மக்களுக்கு முழு சுதந்திரம்!

இந்த நாட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி காலத்தில் வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து தமிழ் இளைஞர், யுவதிகள் யாரும் கைது செய்யப்படவில்லை, சிறையில் அடைக்கப்படவில்லை, வீதிகள் மூடப்பவில்லை, எங்கு வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் பயணம் செய்யவும் முழு சுதந்திரம் வழங்கப்பட்டு இருந்தது என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்து இருந்தார்.

திருக்கோவில் குட்னீக் விளையாட்டு திடலில் அமைச்சர் தயாகமகேயின் ஏற்பாட்டில் சஜித் பிரேமதாச வேட்பாளரை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி கருத்தினைத் தெரிவித்திருந்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை பாராளுமன்றத்தில் கொண்டு வந்த போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் புரட்சியைக் கொண்டு வந்தபோது 52 நாட்கள் போராடி இறுதியில் நீதிமன்றம் சென்று இந்த ஆட்சியை தொடர்ந்து நாட்டில் பாரிய அபிவிருத்திகளை செய்து கொடுத்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

திருக்கோவில் தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...