பங்களாதேஷில் ரயில் விபத்து: 15 பேர் பலி | தினகரன்


பங்களாதேஷில் ரயில் விபத்து: 15 பேர் பலி

பங்களாதேஷில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 15 பேர் உயிரிழந்ததோடு மேலும் 56 பேர் காயமடைந்தனர்.

தெற்கு துறைமுக நகரமான சிட்டகொங் சென்று கொண்டிருந்த ரயிலும் தலைநகர் டாக்காவிற்கு சென்று கொண்டிருந்த ரெயிலுமே நேற்று நேருக்கு நேர் மோதியுள்ளன.

டாக்காவிலிருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள பிரம்மன்பாரியா மாவட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றது.

சமிக்ஞையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதில் சேதமடைந்த ரயில் பெட்டிகளுக்குள் சிக்கி இருக்கும் பயணிகளை மீட்பதில் மீட்பு பணியாளர்கள் கடுமையாக போராடினர். இந்நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்துக் காரணமாக டாக்க மற்றும் சில்ஹட், சிட்டகோங் முக்கிய நகரங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மோசமான உட்கட்டமைப்பு மற்றும் சமிக்ஞைகள் காரணமாக பங்களாதேஷில் ரயில் விபத்துகள் வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது.


Add new comment

Or log in with...