ஐ.சி.சி ரி20 துடுப்பாட்டம், பந்துவீச்சு தரவரிசை வெளியீடு | தினகரன்


ஐ.சி.சி ரி20 துடுப்பாட்டம், பந்துவீச்சு தரவரிசை வெளியீடு

கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாரத்துக் காத்திருந்த ரி20 துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது.

அதன்படி, தற்போது ரி20 உலகக்கிண்ணத்தை முன்னிட்டு ஒவ்வொரு நாடுகளும் ரி20 தொடர்களை நடத்தி வருகின்றது.

இந்த நிலையில், ஐ.சி.சி.யின் ரி20 துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் புதிய தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தரவரிசைப் பட்டியல்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் முதலாவதாக துடுப்பாட்ட தரவரிசைப் பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ள வீரர்களின் விபரங்களை பார்க்கலாம்.

இந்த பட்டியலில், பாகிஸ்தானின் பாபர் அசாம் தொடர்ந்தும் 876 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கின்றார்.

அவுஸ்திரேலியாவின் ஆரோன் பின்ஞ், இரண்டு இடங்கள் ஏற்றம் கண்டு 807 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

நியூஸிலாந்து அணிக்கெதிரான ரி20 தொடரில் சதம் அடித்து அசத்திய இங்கிலாந்து வீரர், டாவிட் மாலன் 782 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

நியூஸிலாந்தின் கொலின் முன்ரோ ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 778 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல், மூன்று இடங்கள் பின்தள்ளப்பட்டு 765 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் ஹஸ்ரதுல்லா சஸாய் ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 727 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.

இந்தியாவின் ரோஹித் சர்மா 677 புள்ளிகளுடன் தொடர்ந்து ஏழாவது இடத்தில் நீடிக்கிறார்.

இந்தியாவின் லோகேஷ் ராகுல் ஒரு இடம் ஏற்றம் கண்டு 660 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்தின் ஒய்ன் மோர்கள், பத்து இடங்கள் முன்னேறி 652 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.

நியூஸிலாந்தின் மார்டின் கப்டில் ஏழு இடங்கள் ஏற்றம் கண்டு 652 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

அடுத்ததாக ரி20 பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலில், முதல் பத்து இடங்களில் உள்ள வீரர்களின் விபரங்களை பார்க்கலாம்.

இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 757 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார்.

நியூஸிலாந்தின் மிட்செல் சான்ட்னர் மூன்று இடங்கள் ஏற்றம் கண்டு 700 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

பாகிஸ்தானின் இமாட் வசிம், ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 686 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் ஆடம் செம்பா இரண்டு இடங்கள் ஏற்றம் கண்டு 678 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

பாகிஸ்தானின் சதாப் கான் ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 673 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

தென்னாபிரிக்காவின் என்டில் பெலுக்வாயோ, ஒரு இடம் ஏற்றம் கண்டு 668 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.

இங்கிலாந்தின் ஆடில் ராஷித், நான்கு இடங்கள் பின்தள்ளப்பட்டு 660 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தை பிடித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் முஜிப் உர் ரஹ்மான் 652 புள்ளிகளுடன் தொடர்ந்தும் எட்டாவது இடத்தில் உள்ளார்.

அவுஸ்திரேலியாவின் ஆஷ்டன் அகர், 57 இடங்கள் ஏற்றம் கண்டு 642 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார்.

இங்கிலாந்தின் கிறிஸ் ஜோர்டன் ஒரு இடம் ஏற்றம் கண்டு 640 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தை பிடித்துள்ளார்.


Add new comment

Or log in with...