Friday, March 29, 2024
Home » 5 அடுக்குமாடித் தொகுதி கட்டமைப்பு நிறைவை கொண்டாடும் Marina Square – Uptown Colombo
வானுயர்ந்த பணியை கௌரவிக்கும் கொண்டாட்டம்

5 அடுக்குமாடித் தொகுதி கட்டமைப்பு நிறைவை கொண்டாடும் Marina Square – Uptown Colombo

by Rizwan Segu Mohideen
February 13, 2024 11:37 am 0 comment

இலங்கையின் முதன்மையான, துறைமுகம் முன்பான சொகுசான, கலப்பு மேம்பாட்டுத் திட்டமான Marina Square – Uptown Colombo, 5 அடுக்குமாடித் தொகுதி கட்டமைப்பின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக, கடந்த 2024 ஜனவரி 30ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வில் அறிவித்துள்ளது. தொழில்துறை ஜாம்பவான்களான Access Engineering PLC மற்றும் China Harbour Engineering Company (CHEC) ஆகியவற்றின் ஆதரவுடன், சவால் மிக்க இரண்டு ஆண்டுகளில் இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்ளை அடைந்துள்ளது. இது இத்திட்டத்திற்கான கூட்டு பங்குதாரர்களின் உறுதியான அர்ப்பணிப்பை கோடிட்டுக் காட்டுகிறது.

 

இந்நிகழ்வில் உரையாற்றிய Access Engineering PLC நிறுவனத்தின் நிறைவேற்று பிரதித் தலைவர் Christopher Joshua, இந்த மைல்கல் தொடர்பிலும், விவேகமான வீட்டு உரிமையாளர்களுக்காக Marina Square கொண்டுள்ள ஆற்றலின் முக்கியத்துவத்தையும் இங்கு சுட்டிக்காட்டினார். இந்தத் தொழில்துறையை முடக்கிய நெருக்கடியைத் தொடர்ந்து, ஐந்து அடுக்குமாடித் தொகுதி கட்டுமானத்தைக் கொண்ட இந்த கட்டமைப்பை நிறைவு செய்தமை ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். அத்துடன் எமது உறுதியான அர்ப்பணிப்பே இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கான ஒரு சான்றாக விளங்குகின்றது. இந்த மைல்கல் சாதனையானது, MEP இல் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஏனைய பணிகள் மற்றும் நிறைவு செய்யப்பட்ட கட்டுமானங்கள் ஆகியன, 2025 ஆம் ஆண்டின் இறுதியில் ஒட்டுமொத்தமாக அதனை நிறைவு செய்வதற்கான பயணத்தில் திட்டத்தை சிறப்பாக வழி நடத்துகிறது.” என்றார்.

இரு நிறுவனங்களின் பங்குதாரர்களின் பிரதிநிதிகள், திட்ட ஆலோசகர்கள், ஒழுங்குபடுத்தும் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டதோடு, அதன் பின்புற கட்ட வானுயர்ந்த மொட்டைமாடியில் ஒரு விருந்தளிப்பு நிகழ்வும் இங்கு இடம்பெற்றது. இங்கிருந்து கொழும்பு துறைமுகம், கொழும்பு நகரம், துறைமுக நகரம் மற்றும் இந்து சமுத்திரத்தின் பரந்த காட்சிகளை பங்குபற்றியோர் கண்டு களித்தனர். இந்த அம்சங்கள் யாவும் மிகச் சிறந்த தெரிவுகளை அடைய விரும்புகின்ற வீட்டு உரிமையாளர்களுக்கு உரிய அம்சங்களாக காணப்படுகின்றன.

இந்நிகழ்வில் தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட, திட்டப் பணிப்பாளரும், Marina Square சபை உறுப்பினருமான கோசல விக்ரமசிங்க, சவாலான காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட நிலைபேறான நிர்மாண நடவடிக்கைகளில், Access Engineering மற்றும் CHEC கொண்டுள்ள பரந்த வளங்கள், பலம் மற்றும் அனுபவமே காரணம் எனக் குறிப்பிட்டார். நாட்டின் நகர்ப்புற சொகுசு வாழ்க்கை அனுபவத்தில் இந்த கட்டமானது, இலங்கையில் நிச்சயமாக புரட்சியை ஏற்படுத்தும். பல்வேறு வசதிகளுடன், ஒவ்வொரு நவீன வீட்டு உரிமையாளரின் தேவைகளுக்கும் ஏற்றவாறான சிந்தனையுடன், எமது தனித்துவமான தளங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அனைத்து கோணத்திலும் வசதியை வழங்கும் வகையில், நகரத்தின் மாற்றத்தைக் காண கொழும்பில் உள்ள சரியான இடமாக இது காணப்படுகின்றது.” என்றார்.

ஒட்டுமொத்த தொழில்துறைக்குமான இந்த சாதனையின் முக்கியத்துவம் குறித்து கருத்துத் தெரிவித்த, China Harbour Engineering Company நிறுவனத்தின் இணை முகாமைத்துவ பணிப்பாளர் Wang Gang, “இந்த கட்டமைப்பின் நிறைவானது Marina Square இற்கு மட்டுமல்லாது, எமது நாட்டின் ஒட்டுமொத்த கட்டுமானத் துறைக்கும் ஒரு மைல்கல்லாகும். கடினமான நேரங்களிலும், நாம் விடாமுயற்சியுடன் வலுவாக எம்மை வெளிப்படுத்த முடியும் எனும் வலுவான செய்தியை வெளியிடுகிறது” என்றார்.

ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள Marina Square, 36 மாடிகள் கொண்ட, 1,088 தனித்தனி வீட்டு அலகுகளைக் கொண்ட 5 அடுக்குமாடி கட்டட தொகுதியையும், 2 ஏக்கர் திறந்தவெளி முற்றம் மற்றும் பொழுதுபோக்கு பகுதிகளைக் கொண்ட திட்டமாகும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கொழும்பு சர்வதேச நிதி நகரத்திலிருந்து (துறைமுக நகரம்) சற்றே 2 கி.மீ. தொலைவிலும், Port Access Elevated Highway இலிருந்து 400 மீற்றர் தொலைவிலும் இது அமைந்துள்ளது. இது, Infinity Pool (முடிவிலி நீச்சல் தடாகம்) முதல் Barbecue Coves, Camping பகுதிகள், ஓடுதல் மற்றும் நடைபயிற்சி பகுதிகள் கொண்ட multipurpose court, squash courts, rooftop skydecks உள்ளிட்ட பல்வேறு பொது வசதிகளையும் கொண்டுள்ளது. இதன் மூலம் நாளைய கொழும்பு நகரத்தின் மையத்தில் Marina Square இனை ஒரு முக்கிய இடமாக நிலைநிறுத்துவதற்கான வெற்றியை இது உறுதி செய்கின்றது.

Marina Square – Uptown Colombo பற்றி:
Marina Square இன் கட்டுமானத்தை முன்னெடுப்பதற்காக, இலங்கையின் முதன்மையான பொறியியல் சேவை வழங்குனரான Access Engineering PLC ஆனது, பிரபலமான சர்வதேச பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனமான China Harbour Engineering Company நிறுவனத்துடன் ஒன்றிணைந்துள்ளது. அனைத்து அம்சங்களும் நிறைந்த இந்த அடுக்குமாடித் திட்டமானது, பிரமிக்க வைக்கும் காட்சிகளை பார்வையிடக் கூடிய, ஒரு முக்கியமான இடத்தில் அமைந்த, கொழும்பில் வசிக்கும் மக்களுக்கு, ஒப்பற்ற வசதிகளுடன், உயர்தர வாழ்க்கையை வழங்குவதவற்காக அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு: www.marinasquare.lk 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT