இலங்கையின் வாகன ஓட்டத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் KIA | தினகரன்


இலங்கையின் வாகன ஓட்டத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் KIA

கொரியாவைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான Kia, இலங்கையில் வாகன ஓட்டத்தில் அதிசயமுறு கவர்ச்சியை மீளக் கொண்டுவருவதற்காக, கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் மூன்று SUV வகை வாகனங்களை இலங்கைக்காக அறிமுகப்படுத்தவுள்ளது.

இலங்கையின் சந்தையில் அழகான, ஆனால் நியாயமான விலை கொண்ட SUV வாகனங்களுக்கான அதிக தேவை காணப்பட்ட போதிலும், புதிய தீர்வைக் கட்டமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டமையால், அவ்வகை வாகனங்களின் இறக்குமதி பாதிக்கப்பட்டது. இந்நிலையிலேயே, இத் தேவையை பூர்த்தி செய்யும் முகமாக Stonic, Seltos மற்றும் Niro என்னும் வாகனங்களை, இவ்வாண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் Kia நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. Kia மோட்டர்ஸ் (லங்கா) நிறுவனமானது அண்மையின் மீள்கட்டமைப்புக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், அதன் வழிகாட்டலின் கீழ் இந்த அறிமுகம் இடம்பெறவுள்ளது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த Kia மோட்டர்ஸ் (லங்கா) நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் தலைமை இயக்க அதிகாரியுமான அன்ட்ரூ பெரேரா, “ Kia வகை வாகனங்களில் மிகவும் அதிக ஆர்வத்தை ஏற்படுத்திய வாகன வகைகளில் மூன்று வகையான வாகனங்கள் மிக விரைவில் இலங்கைக்கு வரவுள்ளன என்ற அறிவிப்பை வழங்குவதில் நாம் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் Kia நிறுவனத்தின் ‘ஆச்சரியப்படுத்தும் சக்தி’ என்பது எப்போதும் போலவே பலமாகக் காணப்படுகிறது. வடிவமைப்பிலும் செயல்திறனிலும் உயர்ந்த நிலையில் பணத்துக்கேற்ற பெறுமதியை வழங்கியதே, Sorento மற்றும் Sportage வாகனங்களின் வெற்றிக்குப் பின்னாலுள்ள காரணங்களாகும்” எனத் தெரிவித்தார்.

மனதின் இளமையை வெளிக்காட்ட வடிவமைக்கப்பட்ட இந்த SUV வாகன வகைகள் ஒவ்வொன்றும் வரி உள்ளடங்கலாக 10 மில்லியன் ரூபாய்க்கும் குறைவான விலையுடையதாக இருக்குமென பெரேரா வெளிப்படுத்தினார். இதன்படி, Stonic 4.8 மில்லியன் முதல் 5.3 மில்லியன் ரூபாய் வரையிலும், Seltos 7.5 மில்லியன் முதல் 8 மில்லியன் ரூபாய் வரையிலும், கலப்பு எரிபொருள் (Hybrid) வகையானதும் சூழலுக்கு நேயமானதுமான Niro, 9.5 மில்லியன் ரூபாயாகவும் விலையிடப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...