போதைப்பொருளுடன் கைது; தப்பியோட முயன்றபோது சூடு | தினகரன்


போதைப்பொருளுடன் கைது; தப்பியோட முயன்றபோது சூடு

பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பியோட முயன்ற ஹெரோயின் கடத்தல்காரர் ஒருவர் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அந்நபர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் காலி – கராப்பிட்டி பகுதியில் இடம்பெற்றதாகபொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.  

காலி நகர சபைக்கு முன்பாக 33 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் நேற்று முன்தினம் (11) பிற்பகல் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.   போத்தல பகுதியைச் சேர்ந்த 34 வயதான நபரே இவ்வாறு  கைது செய்யப்பட்டார்.    சந்தேகநபரை நேற்று பகல் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு அழைத்துச் செல்லப்பட்ட வேளை, பொலிஸ் உத்தியோகத்தர்களை தள்ளிவிட்டு தப்பியோடியுள்ளார்.    இதனையடுத்து, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர், சந்தேகநபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.  படுகாயமடைந்த இவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கையில் உயிரிழந்துள்ளார். 

ஷம்ஸ் பாஹிம்  


Add new comment

Or log in with...