Wednesday, April 24, 2024
Home » ஊவா மாகாண சபை உத்தியோகத்தர்கள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகள்

ஊவா மாகாண சபை உத்தியோகத்தர்கள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகள்

by sachintha
February 20, 2024 11:55 am 0 comment

ஊவா மாகாண விளையாட்டு அமைச்சும், விளையாட்டுத் திணைக்களமும் ஏற்பாடு செய்த 2024 ஊவா மாகாண பொது சேவை விளையாட்டு விழா கடந்த 13 ஆம் திகதி பதுளை கால்பந்து மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 29 ஆம் திகதி விளையாட்டுவிழாவின் நிறைவு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

ஊவா மாகாண விளையாட்டு அமைச்சின் செயலாளர் நிஹால் குணரத்னவின் ஆலோசனையின் பேரில் மாகாண விளையாட்டுப் பணிப்பாளர் டி.எம்.கே.எஸ்.பி.திஸாநாயக்க மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள் ஊவா மாகாண பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்) டபிள்யூ.எம்.ஆர். ரஞ்சித் மற்றும் அதிகாரிகள் தலைமையில் ஆரம்பமாகின .

இப்போட்டிகளில் ஊவா மாகாண சபையின் அமைச்சு மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். அதேவேளை கலாசார திணைக்கள ஊழியர்களின் நடனம், அரச உத்தியோகத்தர்களின் கலை, கலாசர நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

எம்.ஏ.எம்.ஹசனார்…

(ஊவா சுழற்சி நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT