உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு Healthy Life Clinic இன் விழிப்புணர்வு | தினகரன்


உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு Healthy Life Clinic இன் விழிப்புணர்வு

கொழும்பை தளமாகக் கொண்ட மருத்துவ நிலையமான Healthy Life Clinic நவம்பர் 14ம் திகதியான உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, தனிநபர்களுக்கும் சமூகங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

Healthy Life Clinic குடும்பங்கள், தனி நண்பர்கள் அல்லது நிறுவனங்களின் குழுக்களுக்கு 30 தொடக்கம் 60 நிமிடங்கள் இலவச விழிப்புணர்வு அமர்வுகளை முன்னெடுக்கவுள்ளது.

இதன்மூலம் நீரிழிவு நோயை முன்கூட்டியே கண்டறிவதன் முக்கியத்துவம், நீரிழிவு நோய் தங்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ இருப்பதற்கான அறிகுறிகள் மற்றும் குடும்பத்தினர் இந்த நிலைமையை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பது தொடர்பில் சமூகங்களுக்கு கற்பிக்கும் நோக்காகவே இந்த கருத்தரங்கு முன்னெடுக்கப்படுகின்றது.

மிக முக்கியமாக இந்த மாதம் Clinic இனால் மருத்துவ நடவடிக்கைகளுக்காக 20% தள்ளுபடியை வழங்குவதோடு, அழைத்து வரப்படும் இரண்டாவது நபருக்கு பிரத்தியேக வவுச்சர்களும் வழங்கப்படவுள்ளன.

“நீரிழிவு நோய்க்கான அறிகுறிகளை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டுகொள்வதன் மூலம் அதனால் வரும் விளைவுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். பெரும்பாலான மக்கள் அதன் அறிகுறிகளை தாமதமாகியே அடையாளம் காண்கின்றனர். அதனால் பல சிக்கல்களையும் எதிர்கொள்கின்றனர். எனவே இந்த நிலையிலிருந்து மீள்வதற்கும் பாதுகாப்பாக இருப்பதற்கும் அறிவுத் திறன் மிக முக்கியமாக உள்ளது” என Healthy Life Clinic பணிப்பாளர் மற்றும் தலைமை ஆலோசகர் நீரிழிவு நிபுணர் Dr. காயத்திரி பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சர்வதேச நீரிழிவு சம்மேளனம் வெளியிட்ட “நீரிழிவு மற்றும் குடும்பம்” என்ற தொனிப் பொருளைக் கொண்டு Healthy Life Clinic இனால் ந

நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் மற்றும் நீரிழிவு உள்ளவர்களை தேடுவதற்கு தனிநபர்களுக்கு ஊக்குவிப்பை கொடுக்கும் நோக்காக இந்த விழிப்புணர்வு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள சமூகத்தில் வாழும் பெரியவர்களின் 10 பேரில் ஒருவருக்கு இந்த நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...