விறகு வெட்ட சென்ற யாழ். பல்கலை மாணவன் சடலமாக மீட்பு | தினகரன்


விறகு வெட்ட சென்ற யாழ். பல்கலை மாணவன் சடலமாக மீட்பு

வவுனியா வடக்கு பகுதியில் உள்ள காட்டில் காணாமல் போன யாழ்.பல்கலைகழக மாணவன் தேடுதலின் போது சடலமாக மீட்கப்பட்டார்.

குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் தர்மிலன் என்ற மாணவன் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

நேற்று முன்தினம் தடி வெட்டுவதற்காக காட்டுப் பகுதிக்குச் சென்றிருந்தார். நீண்ட நேரமாகியும் குறித்த மாணவன் வீடு திரும்பவில்லை. இந் நிலையில் இச் சம்பவம் குறித்து கனகராயன்குளம் பொலிஸார், அப் பகுதி இளைஞர்கள், விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து தேடுதலை மேற்கொண்டனர்.

இதன்போது நேற்றுக் காலை மீண்டும் தேடுதலை மேற்கொண்ட போது காட்டுக்குள் கிரவல் வெட்டப்பட்ட குழிக்குலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இந் நிலையில் இக் குழிக்குள் தண்ணீர் தேங்கி நின்ற நிலையில் அதனுள் வீழ்ந்து இளைஞன் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

வவுனியா விசேட நிருபர்

 

Add new comment

Or log in with...