போலி நகைகள் அடகு வைத்த இருவர் கைது | தினகரன்


போலி நகைகள் அடகு வைத்த இருவர் கைது

நாட்டின் பல பிரதேசங்களில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இரு சந்தேக நபர்களை பலாங்கொடைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பலாங்கொடை நகரிலுள்ள அரச வங்கியொன்றில் நேற்று முன்தினம் போலியான நகையொன்றை அடகு வைக்க வந்த சந்தேக நபர் இருவர் மூலம் இவ் மோசடிச் சம்பவம் அம்பலத்துக்கு வந்துள்ளது. சந்தேக நபர்களில் ஒருவர் தனது அடையாள அட்டை சகிதம் வங்கி அதிகாரிகளுக்கு வழங்கிய நகையை பரீட்சித்த போது அது போலியானது என  அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன் பின்னர் சந்தேக நபரின் அடையாள அட்டை இலக்கத்தை பதிவு செய்து பார்த்தபோது சில நாட்களுக்கு முன்னர் இதே வங்கியில் நகைகள் அடகு வைத்தமை தெரியவந்துள்ளது.

அதனைதொடர்ந்து சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் போலியான நகைகளை அடகு வைத்து மோசடி செய்துள்ளமை தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் இருவரும் 64 மற்றும் 48 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)

 


Add new comment

Or log in with...