முஸ்லிம்கள் நன்றி கெட்ட சமுதாயமென பார்க்க இடம் வழங்க வேண்டாம் | தினகரன்


முஸ்லிம்கள் நன்றி கெட்ட சமுதாயமென பார்க்க இடம் வழங்க வேண்டாம்

முஸ்லிம்கள் நன்றி கெட்ட சமுதாயம் என பெரும்பான்மை சமூதாயம் பார்க்க இடம் கொடுக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா  தெரிவித்தார்.  

காத்தான்குடியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கோட்டாபவை ஆதரித்து நடாத்தப்பட்ட பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.  

தொடர்ந்து பேசிய அவர், நம்மை சுதந்திரமாக வாழ வைத்த தலைவனுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.  

கடந்த முப்பது வருடங்கள் நாம் பட்ட கஷ்டத்திலிருந்து விடுதலையைப் பெற்றுத் தந்த இறைவனுக்கு முதலில் நன்றி சொல்வதுடன், இந்த கஷ்டமான நிலையை மாற்றித்தந்த தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி சொல்ல இடம் கொடுக்க வில்லை.  

ரவூப் ஹக்கீம் போன்றோர்களுக்கு மக்களல்ல பிரச்சினை அவருடைய எஜமான் செய்கின்ற பணிப்புரைகளை ஏற்று நடப்பது மாத்திரம்தான் அவருக்கு தேவையானது.  

கோட்டாபய           ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வடக்கு, கிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்கள் தீர்மானித்து விட்டனர்.  

நாம் மிக நீண்ட பிழைகளை செய்துள்ளோம். அதிலிருந்து நாம் மீள வேண்டும். பெரும்பான்மை மக்கள் எல்லோரும் கோட்டாவுடன் நிற்கின்றார்கள், என்ற இந்த சூழ் நிலையில் நாம் வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் கோட்டாவுக்கு ஆதரவினை வழங்கி அவரின் வெற்றியில் நாம் பங்காளர்களாக மாற வேண்டும் என்றார். 

புதிய காத்தான்குடி தினரன் நிருபர்

 


Add new comment

Or log in with...