சுமார் 8,000 பிக்குனிகளுக்கு வாக்குரிமை இல்லை | தினகரன்


சுமார் 8,000 பிக்குனிகளுக்கு வாக்குரிமை இல்லை

சுமார் 8,000 பிக்குனிகளுக்கு வாக்குரிமை இல்லை-8000 Bhikkhuni Unable to Cast Their Votes

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுமார் 8,000 பிக்குனிகள் வாக்களிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் பௌத்த பிக்குனிகள் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, இதனை மனித உரிமை ஆணைக்குழு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தெரிவித்துள்ளது.

புத்த சாசன அமைச்சினால் குறித்த பிக்குனிகள் பௌத்த பிக்குனி, என பதிவு செய்யப்படாத நிலையில், ஆட் பதிவுத் திணைக்களமும் அவர்களுக்கு பிக்குனி என தேசிய அடையாள அட்டையை வழங்கவில்லை என்பதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனவே, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் குறித்த பிக்குனிகளுக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்கப்படும் நிலையில் அவர்களால் தேர்தலில் வாக்களிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் என, மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.


Add new comment

Or log in with...