அபிராமிக்கு அன்பு ஒன்றே போதுமாம்! | தினகரன்


அபிராமிக்கு அன்பு ஒன்றே போதுமாம்!

விளம்பர படங்களில், நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை அபிராமி. சமீபத்தில், நடிகர் அஜித்துடன், 'நேர் கொண்ட பார்வை' படத்தில் நடித்திருந்தார். இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. 'பிக்பொஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமும், புகழ் பட்டிதொட்டிகளில் பரவியது. 

சமீபத்தில், கோவை வந்த அபிராமியுடன் சின்ன சந்திப்பு. 'நேர் கொண்ட பார்வை' அனுபவம் எப்படி?அந்த படம், எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. படம் ரிலீசானபோது, 'பிக்பொஸ்' வீட்டில் இருந்தேன். வெளியே வந்த பிறகே, எனது கெரக்டர் எந்தளவுக்கு மக்களிடம் 'ரீச்' ஆயிருக்குன்னு தெரிஞ்சது.

அஜித்துடன் நடித்த அனுபவத்தை சொல்லுங்களேன்...உண்மையில், அவர் ரொம்ப நல்லவரு. அவரு கூட நடிச்சது எனக்கு கிடைச்ச பாக்கியம். வாழ்க்கையில மறக்க முடியாத அனுபவம்ன்னு சொல்லணும். 

'பிக்பொஸ்' நிகழ்ச்சி மூலம் என்ன கத்துக்கிட்டீங்க...வாழ்க்கையில் எந்த மாதிரி இருக்கணும் இருக்கக்கூடாது. ஒரு சின்ன விஷயத்தில், எவ்வளவு சரிவுகள், நிறைவு கிடைக்கும் என்பது, அங்கே போனதுக்கு அப்புறம் தெரிஞ்சது. விமர்சனங்களை பற்றி, என்ன நினைக்கிறீர்கள்...என்னை பொறுத்தவரை, 'பிக்பொஸ்' வீட்டுக்கு எதை எதிர்பார்த்து போனேனோ, அது எனக்கு கிடைச்சிருக்கு. 'டிராபி'யை எதிர்பார்க்கவில்லை. மக்களின் அன்பு கிடைச்சதே போதும். 


Add new comment

Or log in with...