“கையோடு கூட்டிவாங்க” | தினகரன்


“கையோடு கூட்டிவாங்க”

பாணந்துறையில் வெளியீடு

பாணந்துறை தொட்டவத்தை பாடசாலை அதிபர் கவிஞர் கஸ்ஸாலி அஸ் ஸம்ஸின் ”கையோடு கூட்டிவாங்க” கவிதை நுால் வெளியீட்டு விழா பாணந்துறையில். தபால் துறைஅமைச்சின் பணிப்பாளர் ஏ.பி.எம். அஸ்ரப் தலைமையில் நடைபெற்றது.

நுாலின் முதற் பிரதியை  ஏ.ஏ.எம் கௌஸ் பெற்றுக் கொண்டார்.. கலைவாதி கலீல், திக்குவல்லைக் கமால்,அல் பக்ரியா கல்லுாரி அதிபர் எம்.ஜ.எம். றிசான்,விடிவெள்ளி பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளர்  ஏ.எல்.எம் சத்தார் மற்றும் நவமணி ஆசிரியர் என்.எம்.அமீன் ஆகியோர்  நுாலாசிரியர் மற்றும் அவரது கவிதை நூல் பற்றி உரையாற்றினார்கள்.

கவிஞர் கஸ்ஸாலி அஸ் ஸம்ஸ் பாணந்துரை தொட்டவத்தையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் எழுத்துலகில் 1985ல் பிரவேசித்தார். இவரது ஆக்ரோசமான எழுத்துக்கள் இலக்கிய உலகில்பேசப்பட்டன. சிறுகதைகள், கவிதைகள் என தேசிய பத்திரிகைகளில் வெளிவந்தன, தனது கண் முன்னே நடப்பவற்றை அவ்வப்போது கவிதைகளாக வெளியிட்டார்.மனதை உறுத்திய  அனுபவங்கள்,கற்பனைகள் கலந்து கவிதையாகின.  பாணந்துறை பகுதியில் இலக்கிய செயற்பாடுகள் மிக மந்தமான நிலையில் உள்ள இத் தருணத்தில்  அதிபர் கஸ்ஸாலி ஒரு நுாலை வெளியிட்டமை சாலச் சிறந்ததாகும். இப் பிரதேசம்  காலம் சென்ற  பேராசிரியரும்  தமிழ் பண்டிதருமான  அல்லாமா உவைஸ் பிறந்த மண்ணாகும்.

கஸ்ஸாலி போன்றோர் நிறைய எழுத வேண்டும் புத்தகங்களும் வெளியிடப்பட வேண்டும் என்பதே இலக்கிய உலகின் எதிர்பார்ப்பு.                                   

அஷ்ரப் ஏ சமத்
(படங்கள்:தெஹிவளை,கல்கிசை நிருபர்)


Add new comment

Or log in with...