கலா டெக் ரக்பி போட்டி; ஈகள்ஸ் அணி சம்பியன் | தினகரன்


கலா டெக் ரக்பி போட்டி; ஈகள்ஸ் அணி சம்பியன்

சாஹிரா பழைய மாணவர் ரக்பி சங்கம் (சோப்ரா) 10ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஒழுங்கு செய்த கலா டெக் ரக்பி போட்டி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

ஜூனியர் மற்றும் அதற்கு மேற்பட்ட நான்கு வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 25 அணிகள் பங்கேற்றுள்ளன.

அனைத்து ரக்பி பிரியர்களையும் ஒன்றிணைத்து,

கடந்த கால ரக்பி வீரர்களுக்குள் கூட்டுறவை வளர்ப்பதே இதன் நோக்கம்.

குறித்த ஆட்டத்தில் 12 அணிகள் 10 வயதுக்குட்பட்டோர் மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் போட்டியிட்டனர்

போட்டியின் பிரதான அனுசரணையாளர் சாஹிரா கல்லூரியின் முன்னாள் ரக்பி வீரர் பௌசான் அன்வர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு போட்டியில் வெற்றிபெற்ற ஈகள்ஸ் அணியின் தலைவர் அப்சல் இப்ராஹிமுக்கு விருதை வழங்கினர்.

போட்டியின் வெற்றியாளர்களுக்கு கல்லூரி அதிபர் டிரிஸ்வி மரிக்கர், சோப்ரா தலைவர் ஹுசைன் வசிக் மற்றும் முன்னாள் தலைவர் நாசீம் கபூர் ஆகியோர் விருதுகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

ருஸைக் பாரூக்


Add new comment

Or log in with...