நீர்கொழும்பில் 'சன்குயிக் தேசிய கடற்கரை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப்' போட்டி | தினகரன்


நீர்கொழும்பில் 'சன்குயிக் தேசிய கடற்கரை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப்' போட்டி

சன்குயிக் தேசிய கடற்கரை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப்' போட்டியை நடாத்துவதற்காக இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்துடன் மீண்டும் ஒருமுறைகை கோர்த்துள்ளது. 'சன்குயிக் தேசிய கடற்கரை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகள்' நீர்கொழும்பு பொது கடற்கரைப் பூங்காவில் டிசம்பர் 20, 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

இப் போட்டிகள் -ஆண் மற்றும் பெண் குழுக்களில் திறந்த அடிப்படையிலான, 20 வயதுக்கு கீழ்ப்பட்ட மற்றும் 25 வயதுக்குகீழ்ப்பட்டபோட்டிகள் என 3 பிரிவுகளின் கீழ் நடைபெறவிருக்கின்றன.

பலவருடங்களாக இலங்கையின் தேசிய விளையாட்டுக்கு ஆதரவளிக்கும் ஒருவர்த்தகக் குறியீடாக திகழும் சன்குயிக் ஆனது,கடந்தவருடம் முதல் 'தேசிய கடற்கரை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியை' நடாத்தி வருகின்ற அதேநேரத்தில்,'வர்த்தக நிறுவனங்கள் கரப்பந்தாட்ட சம்பயின்ஷிப் போட்டிக்கு' 2012ஆம் ஆண்டிலிருந்து ஒரு அனுசரணையாளராக செயற்பட்டுவருகின்றது.

இப்போட்டிகளின் வெற்றியாளர்களுக்குசன்குயிக் இன் வெகுமதியாககவர்ச்சிகரமானபணப் பரிசுகள் வழங்கப்படும்.

'சன்குயிக் தேசியகடற்கரைகரப்பந்தாட்டசம்பியன்ஷிப் போட்டிகள் 'நடைபெறுகின்ற சமகாலத்தில்,ஒருநாள் மாலை நேரத்தில் கடற்கரையோர கொண்டாட்ட நிகழ்வொன்றும் இடம்பெறவுள்ளது.

பரீத் ஏ றகுமான்


Add new comment

Or log in with...