லங்கா ஸ்டார் விருதுகள் 2019: Selmo நிறுவனத்துக்கு கெளரவிப்பு | தினகரன்


லங்கா ஸ்டார் விருதுகள் 2019: Selmo நிறுவனத்துக்கு கெளரவிப்பு

 உள்நாட்டு பொதியிடல் துறையில் முன்னோடியாக திகழும் Selmo பிரைவட் லிமிடெட், அண்மையில் இடம்பெற்ற லங்கா ஸ்டார் 2019 விருதுகள் வழங்கும் நிகழ்வில், பெருமைக்குரிய லங்கா ஸ்டார் தங்க விருதையும், ஜனாதிபதி விருதையும் தனதாக்கியிருந்தது. பொதியிடல் துறையில் சிறப்பாக செயலாற்றும் நிறுவனங்களை கெளரவிக்கும் வகையில், இலங்கை பொதியிடல் கல்வியகம் மற்றும் பொதியிடல் அபிவிருத்தி நிலையம் ஆகியவற்றினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வாக அமைந்துள்ளது. இந்த நிகழ்வு, கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் இடம்பெற்றதுடன், இதில் துறைசார் நிபுணர்கள் மற்றும் விருந்தினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

புத்தாக்கமான பொதியிடல் தீர்வுகளை உற்பத்தி செய்து விநியோகிக்கும் நடவடிக்கைகளை Selmo மேற்கொண்ட வண்ணமுள்ளது. Selmo இடமிருந்து பொதியிடல் தீர்வுகளை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்கள், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் துறையைச் சேர்ந்த, கேக், சிற்றுண்டிகள், பிஸ்கட்ஸ், பானங்கள் மற்றும் மென் பானங்கள், தேயிலை, நூடுல்ஸ், சோயா, இறைச்சி பொருட்கள், வாசனைத்திரவியங்கள், உலர் உணவுப் பொருட்கள் போன்றவற்றில் ஈடுபாட்டை கொண்டவர்களாக அமைந்துள்ளனர். தெகடான பகுதியில் அமைந்துள்ள தனது தொழிற்சாலையை தொடர்ந்து மெருகேற்றம் செய்வதில் Selmo முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது. இதன் பிரகாரம், நவீன வசதிகள் படைத்த இயந்திர சாதனங்களை நிறுவி, வாடிக்கையாளர்களுக்கு உயர் தர சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.

இலங்கையின் பொதியிடல் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக இலங்கை பொதியிடல் கல்வியகம் அமைந்துள்ளது. இதில் பொதியிடலுடன் தொடர்புடைய தயாரிப்புகளை உற்பத்தி செய்வோர், பயன்படுத்துவோர் மற்றும் விநியோகிப்போர் என பலரும் அங்கம் வகிக்கின்றனர். கடந்த மூன்று தசாப்த காலப்பகுதியில், இந்த நிலையத்தினால் நாட்டின் பொதியிடல் துறையின் வளர்ச்சிக்கு பெருமளவு பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...