நாடு முழுவதும் PickMe - பிக்மீ | தினகரன்


நாடு முழுவதும் PickMe - பிக்மீ

புதிய முயற்சிகள் மூலம் சாரதிப் பங்காளர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பெறுமதியான முறையில், தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை வழங்கும் முன்னணி கம்பனியான PickMe ஆனது ‘சுய பதிவு செயலி’ ஒன்றை அறிமுகப்படுத்தியிருப்பதாக அறிவித்துள்ளது. நாடு முழுவதிலுமுள்ள சாரதிகள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து PickMe உடன் பதிவுசெய்துகொண்டால் சாரதிப் பங்காளர்களாக இணைந்து வாடிக்கையாளர்களுக்கு சவாரிகளை வழங்க முடியும். PickMe உடன் இணைய விரும்பும் சாரதிப் பங்காளர்கள் PickMe தலைமையகத்துக்கு நேரடியாக வருகைதந்து பதிவுகளை மேற்கொள்வதில் எதிர்நோக்கும் சிக்கல்களை தவிர்ப்பதற்கு இந்த முயற்சி உறுதுணையாவிருக்கும்.

“எமது தளத்தில் சாரதிப் பங்காளர்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றனர். இதனால் நாம் வசதிகளை வழங்கவும், செயற்பாடுகளை இலகுபடுத்தவும் தொடர்ச்சியாக உழைத்து வருகின்றோம். இந்த வரிசையில் சுய பதிவு செயலியானது சாரதிப் பங்காளர்களின் பதிவுகளை இலகு படுத்துவதற்கான நடவடிக்கை மாத்திரமன்றி, நாடு முழுவதிலுமுள்ள வாடிக்கையாளர்கள் தமக்கு விரும்பிய நேரத்தில், விரும்பிய இடத்துக்கு PickMe போக்குவரத்துத் தீர்வின் ஊடாக சாரதிப் பங்காளர்களை இலகுவில் அணுகுவதற்கான வாய்ப்பையும் பெற்றுக்கொள்வர். சுய பதிவு செயலியானது சாரதிப் பங்காளர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் வரமாக அமையும்” என PickMe இன் பிரதம செயற்பாட்டு அதிகாரி இசிர பெரேரா கருத்துத் தெரிவித்தார்.

என்ரொய்ட் சந்தையிலிருந்து PickMe இன் ‘சுய பதிவு’ செயலியை ஆகக் குறைந்தது RAM of 2GB கொண்ட Android 4.5 கையடக்கத்தொலைபேசிகளில் தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளலாம். ‘Tak-Tik-Tuk’ எனப் பெயரைக் கொண்ட இந்த செயலி மும்மொழிகளிலும் இலகுவான அறிவுறுத்தல்களைக் கொண்டது. தானாகவே விளக்கத்தை வழங்கக் கூடிய இந்த செயலியானது சாரதிப் பங்காளர்களின் பதிவுக்குத் தேவையான சாரதி அனுமதிப் பத்திரம், வருமானப் பத்திரம், அடையாள அட்டை அளவிலான புகைப்படங்கள் போன்ற ஆவணங்களை தரவேற்றக்கூடிய வசதிகளையும் கொண்டுள்ளது.


Add new comment

Or log in with...