உலகமே கொண்டாடும் 11.11

உலகமே கொண்டாடும் 11.11-Daraz 11.11

2018 ஆம் ஆண்டில் Daraz.lk உலகின் மிகப் பெரிய ஒன்லைன் விற்பனையை இலங்கையில் அறிமுகப்படுத்தியதோடு, அதனை இவ்வருடமும் தொடர நிறுவனம் எதிர்பார்க்கின்றது. 11.11 என்ற இலக்கம் குறிப்பிடுவது போல் உலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் விலைக்கழிவு நாளான இத்தினத்தில் Daraz நிறுவனம் நவம்பர் 11 ஆம் திகதி இந்த விற்பனை நிகழ்வை நடத்த எதிர்பார்க்கின்றது.

இலங்கையில் மூன்று வருட காலங்களாக Daraz நிறுவனம் பல்வேறு விற்பனையாளர்களைக் கொண்ட வலையமைப்பு ஒன்றை உருவாக்கிக் கொண்டுள்ளதோடு, ஒன்லைன் ஷொப்பிங் செய்வதற்கு மிகச் சிறந்த தளமாகவும் தற்போது செயற்பட்டு வருகின்றது.

உலகமே கொண்டாடும் 11.11-Daraz 11.11

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், விற்பனையாளர்களின் எண்ணிக்கை 8,000 இலிருந்து 26,000 வரை அதிகரித்துள்ளன. ஆயிரக்கணக்கான விற்பனையாளர்கள் நாளுக்கு நாள், மாதா மாதம் இணைந்த வண்ணமே உள்ளனர். அதிகரித்து வரும் இந்த விற்பனையாளர்கள் காரணமாக, தினம் ஒன்றுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான உற்பத்திகளை Daraz மூலமாக அதே கணக்கில் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இலங்கையின் ஒன்லைன் கொள்வனவாளர்களுக்கு இவ்வருடம் மிகப் பெரிய 11.11 அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்க இதன்மூலம் தயாராகவுள்ளது.

பிரசித்தி பெற்ற பல்வேறு வர்த்தகப் பெயர்களான அவிராட்டே, LICC, வென்டேஜ், டிலே அன்ட் கார்லோ, எமரல்ட், சிக்னேச்சர், Giordano, TOFO, BATA மற்றும் ஆஅைழளய ஆகிய நிறுவனங்களோடு கைகோர்த்துள்ள Daraz, அதன் சொந்த வர்த்தகப் பெயரான Daraz செலக்ட் ஆகிய வர்த்தக உற்பத்திகளையும் Daraz 11.11 இல் 80% விலைக் கழிவு வரை பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கிறது. அதேவேளை, 11 ஆம் மாதம் 11 ஆம் திகதி மார்வெல் மற்றும் டிஸ்னி ஆகிய வர்த்தகப் பெயர்களின் உற்பத்திகளையும் ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் ரீ-ஷேட்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வும் நடத்தப்பட இருக்கிறது.

Casio, Titan, GMT மற்றும் Ferrari கைக்கடிகாரங்களுக்கு 25% வரையிலான விலைக் கழிவுகளைப் பெற்றுக் கொடுக்கவும் குறித்த தினத்தில் இலவச விநியோக சேவைகளை வழங்கவும் தயாராகவுள்ளது.

இலத்திரனியல் உபகரணங்கள்
Daraz நிறுவனத்தின் பங்காளித்துவ நிறுவனங்களான HP, Go Pro, புரௌன் அன்ட் கம்பனி, கெப்ரிகோன், Philips, Dell, Kaspersky, Lenovo, Skullcandy ஆகிய நிறுவனங்கள் 11.11 இல் இலத்திரனியல் தள உற்பத்திகளின் தொகுதியொன்றை சிறந்த விலைக் கழிவுகளுடன் பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்பார்க்கிறது.

கையடக்கத் தொலைபேசிகளும் உதிரிப்பாகங்களும்
Samsung, Huawei, One+, Xiaomi ஆகிய நிறுவனங்களோடு இணைந்து iPhone 11, One+ 7T, Huawei nova 5T, Samsung Note Series ஆகிய பிரிவுகளிலான கையடக்கத் தொலைபேசிகளை இதன்போது குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும். எவ்வாறாயினும், இதன் மிகப் பெரிய அம்சமாகிய இதுவரை நாட்டில் ஒன்லைன் அல்லது எந்தவித விற்பனை நிலையங்களிலோ பெற்றுக்கொள்ள முடியாத Samsung Galaxy M30S கையடக்கத் தொலைபேசி 6000mAhபற்றரியுடன் Daraz மூலம் மாத்திரமே பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். அத்துடன், சகல வகையான கையடக்கத் தொலைபேசிகளுக்கும் உரிய உதிரிப்பாகங்களையும் இந்த நிகழ்வின் போது குறைந்த விலைகளில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

சீட்டிழுப்பு
11.11 இல் இரண்டு மோட்டார் சைக்கிள்களை 40% விலைக் கழிவுகளுடன் பெற்றுக் கொள்வதற்கான சீட்டிழுப்பு ஒன்று நடத்தப்பட இருக்கிறது. இதன்போது மேலும் பல இலவச கூப்பன்கள், வவுச்சர்கள் மற்றும் இலவசங்கள் 11.11 ஒன்லைன் வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுக்கொடுக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அன்றாட பொருட்கள்
Daraz நிறுவனத்தின் நான்கு பிரிவுகளுக்குள் அடங்கும் பொருட்கள் 11.11 இல் 70% வரையான விலைக் கழிவுகளில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். 11.11 நிகழ்வில் பிளட்டினம் அனுசரணையாளரான யுனிலிவர் நிறுவனம் அதன் பிரதான உற்பத்தி வர்த்தகப் பெயர்களான Surfexcel, Ceylonta, Comfort, Marmite,VIM, Signal, Closeup, lifebuoy, AXE, rexona,Clear, Sunsilk,Vaseline, Ponds,Tresemme,  Dove ஆகிய உற்பத்திகளை வைத்து விலைக் கழிவுகளைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கிறது. அத்துடன், ரெக்கிட் பென்கிசர் நிறுவனங்களான ரெக்கிட் பென்கிசர் மெட் ஜொன்சன் நியூட்டிஷன், அன்கர், ரத்தி, ஜேனியர், Eukanuba, மார்வல் மற்றும் டிரைப்பர்ஸ் ஆகிய நிறுவனங்களும் பல்வேறு விலைக் கழிவுகளைப் பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கின்றன. மூன்று முதல் ஐந்து நாட்கள் வரையிலான விநியோக சேவை ஒன்றை பெற்றுக்கொடுக்க Daraz எதிர்பார்க்கிறது. அனைத்து FMCGஉற்பத்திகளும் 11.11 இல் மிகச் சிறந்த விலைகளில் கிடைப்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

நாட்டின் முன்னணி வங்கிகளான சம்பத் வங்கி, கொமர்ஷல் வங்கி, HNB, HSBC, NDB, செலான் வங்கி, இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியனவும் 11.11 நிகழ்வில் இணைந்து கொண்டுள்ளதோடு, மேலும் 10% விலைக் கழிவுகளை இந்த உற்பத்திகளுக்கு ஏற்கனவே குறிப்பிடப்பட்ட உற்பத்திகளுக்கு பெற்றுக்கொடுப்பதோடு, மாதாந்தம் தவணைக் கட்டண வசதிகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. விலை அதிகமான பொருட்கள், விசேடமாக வீட்டுத் தளபாடங்கள் மற்றும் வீட்டு உற்பத்திகள் மற்றும் கருவிகள் என்பனவற்றைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இது மிகவும் உதவியாக அமையவுள்ளது.

11.11 இற்கு ஓரிரு நாட்களே இருப்பதோடு, Daraz இன் களஞ்சியசாலைகள் இந்த அனைத்து உற்பத்திகளையும் தமது களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்துவதற்கு கடுமையாகப் பணியாற்றி வருகின்றன. அத்துடன், இலங்கையின் சகல பாகங்களுக்கும் இவற்றைக் கொண்டு சேர்ப்பதற்கும் தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, உங்களது நாட்காட்டியில் இந்த தினத்தை விசேடமாக குறிப்பிட்டு வைத்திருக்குமாறு நாம் உங்களைக் கேட்டுக்கொள்வதோடு, உலகின் மிகப் பெரிய விற்பனைக்கு Daraz தயாராவதோடு, இதன் மகிழ்ச்சியையும் வசதியையும் உலகில் எங்கிருந்தாலும், எப்பொழுதும் அனுபவிக்க உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும்.


Add new comment

Or log in with...