பாதுக்கை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி | தினகரன்


பாதுக்கை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

பாதுக்க, கலகெதர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு (08) குறித்த பிரதேசத்திலுள்ள உணவகத்தில்  (மதுபான சாலை) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்துகொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், அவ்வுணவகத்தில் இருந்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.  

இதில் காயமடைந்த குறித்த நபர் பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் உயிரிழந்துள்ளார்.

கலகெதர பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய தர்ஷன லசந்த என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யும் நோக்கில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.   


Add new comment

Or log in with...