எல்லோரும் சுதந்திரமாய் வாழும் யாப்பை உருவாக்க வேண்டும் | தினகரன்


எல்லோரும் சுதந்திரமாய் வாழும் யாப்பை உருவாக்க வேண்டும்

எல்லோரும் சுதந்திரமாக அவரவர்களுடைய உரிமைகளை பெற்றுக் கொள்ளக்கூடியவாறு ஒரு யாப்பை உருவாக்க வேண்டும். அதிகாரப் பகிர்வு என்கின்ற பெயரில் ஒவ்வொரு நாட்டிற்கும் தேவையானவாறு இந்த நாடு கூறுபோட இடமளிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா கூறினார். 

அக்கரைப்பற்று  காதிரியாவில் செவ்வாக்கிழமை (05) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,- மாகாண திருத்தச் சட்டம் கூட இந்தியாவினுடைய அழுத்தத்தினால் கொண்டுவரப்பட்டது. நாங்கள் மாகாண சபை கேட்கவில்லை. இந்த நாட்டில் வாழுகின்ற முஸ்லிம் மக்களும் சிங்கள மக்களும் மாகாண சபை கேட்கவில்லை வாழ்வதற்கு வழி விடுங்கள். நான் இதனை பல அரசியல் தலைவர்களிடம் சொன்னேன் சிங்கள மக்கள் 55வீதமாக இருந்து ஏனைய சிறுபான்மை 45வீதமாக இருந்தால் சிங்கள மக்களும், தலைவர்களும் பயப்படுவததில் அர்த்தம் இருக்கிறது.

ஆனால் சிங்கள மக்கள் 70வீதம் வாழ்கிறார்கள் ஏனையவர்கள் 30வீதம் வாழ்கிறார்கள் அப்படியிருந்தால் ஏன் 70திற்குரிய விகிதாசாரம் 30திற்குரிய விகிதாசாரத்தையும் நாங்கள் ஏன் பேண முடியாது?

எமக்கு ஒன்றும் வேண்டாம் .நாட்டை மீட்ட தலைவனுக்கு சிங்கள மக்கள் வாக்குப் போடுகிறார்கள். முஸ்லிம்கள் போடவில்லை.

எமது முஸ்லிம் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு வாக்களியுங்கள். நமது கண்முன்னே பொலிசாரும் அரசாங்கமும் பார்த்துக்கொண்டிருந்தபோதே அம்பாறை பள்ளி உடைக்கப்பட்டது. திகனையில் அடித்துக் கொண்டே இருந்தார்கள். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது ரணில் விக்கிரமசிங்கவும் அதனை அறுவடை செய்து கொண்டு வருகின்றார். உண்மை பேசுவதற்கு எதற்கு பயப்பட வேண்டும். கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் முழு இலங்கையிலும் 62வீதமான வாக்குகளை பெற்று எல்லா வட்டாரங்களையும் வென்ற ஒரு பெருமை இந்த தேசிய காங்கிரசின் அக்கரைப்பற்று மாநகரசபை மற்றும் பிரதேச சபைக்கும் இருந்தது. அதற்கு சொந்தக் காரர்கள் நீங்கள்.

பாராளுமன்றத் தேர்தலை விடவும் ஜனாதிபதித் தேர்தலே முக்கியமானது. ஏன் தெரியுமா பாராளுமன்றத்தில் நாங்கள் இல்லாவிட்டாலும் நாட்டை பாதுகாக்கக் கூடிய  ஒருவருடைய கையில் நாட்டை கொடுக்க வேண்டும். 2005 இல் நாம் கொடுத்தோம் வாழவைத்துக் காட்டினான். ஆகவே வரலாற்றில் இது முக்கியமான விடயமாகும் என அவர் மேலும் தெரிவித்தார். 

(அக்கரைப்பற்று மத்திய நிருபர்) 


Add new comment

Or log in with...