பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி பிரேசில் பயணம் | தினகரன்


பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி பிரேசில் பயணம்

பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி பிரேசில் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய ஐந்து பெரும் நாடுகளை உள்ளடக்கியதாக பிரிக்ஸ் அமைப்பு செய்லபடுகிறது.

இந்த அமைப்பின் 11வது உச்சிமாநாடு வரும் நவம்பர் 13, மற்றும் 14ஆம் திகதிகளில் பிரேசிலில் நடைபெறுகிறது.

இந்த மாநாடானது 'புதிய எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி' என்ற தலைப்பில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வரும் 13-ஆம் தேதி பிரேசில் செல்கிறார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


Add new comment

Or log in with...