திருவள்ளுவர் சிலை விவகாரத்தில் தேவையற்ற சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும் | தினகரன்


திருவள்ளுவர் சிலை விவகாரத்தில் தேவையற்ற சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும்

திருவள்ளுவர் சிலை விவகாரம் குறித்து ஏற்கனவே அறிக்கை கொடுத்துள்ளேன். இந்த விசயத்தில் தேவையற்ற சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

வெங்காய விலை அதிகரித்துள்ளதை கட்டுப்படுத்த அரசு இறக்குமதி செய்யலாம். விலை அதிகரிப்பை காரணம் காட்டி சிலர் வெங்காயத்தை பதுக்கி உள்ளனர்.

திருவள்ளுவர் சிலை விவகாரம் குறித்து ஏற்கனவே அறிக்கை கொடுத்துள்ளேன். இந்த விசயத்தில் தேவையற்ற சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும். இந்த விசயம் சர்ச்சைகள் இல்லாமல் முடிவுக்கு வர வேண்டும்.

ஒன்லைன் வர்த்தகத்தினால் பாதிப்பு என்பது உண்மைதான். சிறுகுறு வணிகர்களை இணைத்து வர்த்தகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு செயல்பட வேண்டும்.


Add new comment

Or log in with...