ஹிஸ்புல்லாஹ், அதாவுல்லாஹ் அரசியல் சீரோ ஆகிவிடுவர் | தினகரன்


ஹிஸ்புல்லாஹ், அதாவுல்லாஹ் அரசியல் சீரோ ஆகிவிடுவர்

பாராளுமன்ற உறுப்பினர் நஸீர்

சஜித் பிரேமதாச ஜனாதிபதியானதும் முன்னாள் ஆளுநர் எம்.எல்.எம்.ஏ.ஹிஸ்புல்லாஹ் மற்றும் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் ஆகியோர்களது அரசியல் 'சீரோ ' ஆகிவிடும் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார். 

அட்டாளைச்சேனை பிரதான வீதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு  தெரிவித்தார். 

இந்நிகழ்வில் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசீம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண 

சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.தவம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர்,  முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்களான  யூ.எம்.வாஹிட், எஸ்.எம்.எம்.பளீல், அட்டாளைச்சேனைப் பிரதேச சபை =உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். 

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

 கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் குறிப்பிட்ட இருவரும் தோல்வியடைந்தனர். பின்னர் தேசியப் பட்டியல் மூலம் எம்.எல்.எம்.ஏ.ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றம் சென்றார்.பின்னர் பாராளுமன்றப் பதவியை இராஜினாமச் செய்து விட்டு கிழக்கு மாகாண ஆளுநரானார். சஹரானின்  விடயத்தில் எதிர் அணியினர் இவரையும் தொடர்புபடுத்திய போது எமது தலைமை உட்பட 21முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் அவருக்காக அமைச்சுப் பதவிகளை  இராஜினாமாச் செய்து விட்டு பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தோம்.

இதற்காக மஹிந்த தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் எங்களைப்பார்த்து கூப் போட்டார்கள், நகைப்புச் செய்தார்கள் புத்தகங்களால் வீசினார்கள் அவதுாறு கூறினார்கள். இவற்றை எல்லாம் தற்போது இவர் மறந்து கோட்டாவின் முகவராகச் செயற்படுகின்றார். 

முடியுமானால் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் ஹிஸ்புல்லாஹ்வினால் ஒருகூட்டத்தை நடாத்திக் காட்டட்டும் நான் சவால் விடுகின்றேன்.இந்த நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு பல்வேறுபட்ட துன்பங்களை ஏற்படுத்திய 

கோட்டாவை இத்தேர்தலில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தோற்கடிப்போம்.

முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின்  அரசியல் அதிகாரம் எதிர்வரும் 16ம்திகதியுடன் முற்றுப்பெறவுள்ளதுடன் தேசிய காங்கிரஸ் கட்சியின் கதையும் முடிவடையவுள்ள விடயத்தினை அட்டாளைச்சேனையில் இவருக்கு வக்காளத்து  வாங்கும் ஒரு சில ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 நீங்கள் ஏன் கோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டும் வெள்ளை வான் கலாசாரத்தை எப்படி மறப்பது என உங்களிடத்தில் நான்   வினாத் தொடுக்கின்றேன்?  என்றார். 

(ஒலுவில் கிழக்கு  தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...