Home » பெற்றோல், டீசலுக்கு விடைகொடுப்பதற்காக மின்சார வாகனத் தயாரிப்பில் இந்தியா தீவிரம்!

பெற்றோல், டீசலுக்கு விடைகொடுப்பதற்காக மின்சார வாகனத் தயாரிப்பில் இந்தியா தீவிரம்!

by damith
February 19, 2024 12:21 pm 0 comment

இந்தியாவில் பெட்ரோல், டீசல்வாகனங்களால் சுற்றுச்சூழல் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே மின்சார வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாட்டை அரசு ஊக்குவித்து வருகிறது. முக்கியமாக பொதுப்போக்குவரத்தில் மின்சார வாகனங்களை அதிகளவில் புகுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த விஷயத்தில் டெல்லி இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழ்கிறது. டெல்லியில் ஏற்கனவே நிறைய எலெக்ட்ரிக் பஸ்கள் (Electric Buses) இயங்கி வருகின்றன. இந்தச் சூழலில், தற்போது புதிதாக 350 எலெக்ட்ரிக் பஸ்கள் அங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் டெல்லியில் இயங்கும் ஒட்டுமொத்த எலெக்ட்ரிக் பஸ்களின் எண்ணிக்கை 1,650 ஆக உயர்ந்துள்ளது.

புதிய மின்சார பஸ்கள் அறிமுக நிகழ்ச்சியில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கவர்னர் வினய் குமார் சக்ஸேனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தியாவிலேயே அதிக மின்சார பஸ்கள் இயக்கப்படும் நகரம் என்ற பெருமையை டெல்லி பெற்றுள்ளது. இது நிச்சயமாக சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்சினையை கட்டுப்படுத்தும் என்று நம்பப்படுகின்றது.

டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய மின்சார பஸ்களில் ஜி.பி.எஸ், டிஸ்க் பிரேக்குகள் உட்பட ஏராளமான வசதிகள் உள்ளன. தீ பிடித்தால் அதை கண்டறிந்து ‘எலாம்’ அடித்து எச்சரிக்கை செய்யும் வசதியும் இந்த புதிய எலெக்ட்ரிக் பஸ்களில் இருக்கிறது. உலகளவில் பார்த்தால் மின்சார பஸ்களை உற்பத்தி செய்யும் பட்டியலில் டெல்லி தற்போது 3 ஆவது இடத்தில் இருக்கிறது.

டெல்லியில் தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள எலெக்ட்ரிக் பஸ்களின் Driving Range சுமார் 250 கிலோ மீட்டர் ஆகும். சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்சினையை குறைப்பதுடன், மசகு எண்ணெய் இறக்குமதிக்காகச் செலவிடும் தொகையையும் குறைக்க முடியுமென நம்பப்படுகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT