கொழும்பின் மத்தியில் அதி ஆடம்பர, தனியுரிமை வீட்டுமனைத் தொடர் | தினகரன்


கொழும்பின் மத்தியில் அதி ஆடம்பர, தனியுரிமை வீட்டுமனைத் தொடர்

கொழும்பின் மத்தியில் அதி ஆடம்பர, தனியுரிமை வீட்டுமனைத் தொடர்-Prime Grand, Ward Place promises utmost privacy

Prime Grand, வோட் பிளேஸ் கொழும்பு 07 இல்

கொழும்பின் மத்தியில் அதி ஆடம்பர, தனியுரிமை வீட்டுமனைத் தொடர்-Prime Grand, Ward Place promises utmost privacyPrime Group இன் முதன்மையான ஆடம்பர உயர் மாடிமனைத் திட்டமான Prime Grand, தனது எதிர்கால குடியிருப்பாளர்களுக்கு 'உச்சக்கட்ட தனியுரிமையை' உறுதிசெய்வதுடன், கொழும்பின் வானவிளிம்பை தடங்கலின்றி பார்த்து ரசிக்கும் வாய்ப்பை வழங்குகின்றது. இது கொழும்பு 07 இல் அமைந்துள்ள ஒரே ஒரு அதி உயர் மாடிமனைத் திட்டமென்பதுடன். உயர் மட்ட வாழ்க்கையோடு தொடர்புபட்ட ‘வோட் பிளேஸ்’ என்ற முகவரியைக் கொண்டுள்ளது.

ஒவ்வொருவர் கையிலும் ஸ்மார்ட் போன், ஒவ்வொரு வீட்டிலும் பாதுகாப்பு கமெராக்கள் இருக்கும் இன்றைய உலகில் ஒவ்வொரு வீட்டிற்கும் 'முழுமையான தனியுரிமை'   அவசியமானதாகும். எனவேதான், Prime Grand ஐ வடிவமைக்கும் போது தனிமை விரும்பிகளுக்கு தமது வாழ்வை நிம்மதியாக வாழும் பொருட்டு Prime Group ‘தனியுரிமை’ என்ற அம்சத்துக்கு முன்னுரிமையளித்துள்ளது.

அந்த வகையில், ஒவ்வொரு அம்சத்திலும் அதன் பிரத்தியேக வாடிக்கையாளர்களின் தனியுரிமையை நிலைநிறுத்தும் வகையில் Prime Grand வடிவமைக்கப்பட்டுள்ளது.  இன்று சொகுசு மாடிமனைகளில்  குடியிருப்பவர்கள் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய பிரச்சினை தனியுரிமை, அங்கு ஒவ்வொரு மனையும் ஒன்றையொன்று பார்க்க முடியாதவகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மனையின் வாசல் இன்னொரு மனையின் வாசலை நோக்காமல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Prime Grand இல் எந்தவொரு மனை மற்றும் Balcony இன்னொன்றை நோக்கியவாறு அமைக்கப்படவில்லை. இதற்கு ஏற்றால் போல் ஒரு கோபுரம், இரண்டு பிரிவுகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளதுடன், இந்த அமைப்பானது  மனைகள் ஒன்று நோக்கியவாறு, புலப்படும் வகையில் இருக்கின்றமையை தவிர்க்கின்றது. மேலும், Prime Grand 100% குடியிருப்பு சார்ந்த திட்டமென்பதுடன், கொழும்பு 07, இலக்கம் 64 வோட் பிரதேசத்தில் ஒரு ஏக்கரில் அமைந்துள்ள ஒரே ஒரு அதி உயர் மாடிமனைத் தொடராகும்.

கொழும்பின் மத்தியில் அதி ஆடம்பர, தனியுரிமை வீட்டுமனைத் தொடர்-Prime Grand, Ward Place promises utmost privacy

இது தொடர்பில் Prime Group இன் தலைவர் பிராமனகே பிரேமலால் தெரிவிக்கையில், "இலங்கையர்களான நாம் எப்போதும் எமது வீடுகள் சமூக உணர்வுடன் தனித்திருப்பதை விரும்புகின்றோம். அந்த உணர்வைப் பூர்த்தி செய்வதற்காக, இலங்கையில் மிகவும் தனிப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்க எங்களால் முடிந்தவரை முயற்சி செய்துள்ளோம்.  கட்டிடத்தின் புதுமையான வடிவம், தனியுரிமையின் பொருட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் இடைப்பட்ட வெற்றிடம், மூலோபாயமாக அமைக்கப்பட்டுள்ள மின் தூக்கி போன்ற பல அம்சங்கள் மூலம் குடியிருப்பாளர்கள் தனியாக அமைந்துள்ள வீட்டின் தனிமையை அனுபவிக்க முடியும்" என்றார்.

"வோட் பிளேஸ், கொழும்பு 07 இன் கௌரவத்துக்கு ஏற்ப, தனியுரிமையை மேம்படுத்த Prime Grandஐ 100% வீட்டுமனைத் திட்டமாக அமைக்க நாம் தீர்மானித்தோம். மேலும் 332 மனைகளின் பொழுதுபோக்குக்கென 40,000 சதுர அடி நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளமையானது சமூக உணர்வுக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை வெளிக்காட்டுகின்றது," என Prime Group இன் தலைவர் பிராமனகே பிரேமலால் தெரிவித்துள்ளார்.

அந்தந்த தளத்துக்காவும், 5ஆம் மற்றும் 32 ஆம் மாடிகளில் அமைந்துள்ள பொழுதுபோக்கு தளங்களுக்கென மட்டும் ஒதுக்கப்பட்ட ‘Access Controlled’ அட்டைகளுடன் கூடிய மின் தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கொழும்பின் மத்தியில் அதி ஆடம்பர, தனியுரிமை வீட்டுமனைத் தொடர்-Prime Grand, Ward Place promises utmost privacy

இந்த மின் தூக்கிகள் மனைகளின் நுழைவாயிலுக்கு திறக்காமல் தனிப்பட்ட முகப்பு அறைகளுக்கு மட்டுமே திறக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளமையானது உச்சக்கட்ட தனியுரிமையை மேலும் உறுதி செய்கின்றது. குடியிருப்பாளர்கள் தங்கள் வீட்டிலிருந்து முகப்பு அறைகளுக்கு இணைக்கப்பட்ட தனிப்பட்ட வீடியோ-கதவு தொலைபேசி அமைப்பு மூலம் பார்வையாளர் அணுகலைக் கட்டுப்படுத்த முடியும்.  மேலும், மனைகள் ஒவ்வொன்றிற்கும் இடையேயான தனியுரிமை வெற்றிடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது குடியிருப்பாளர்கள் தனியுரிமையையும், தமது மனை  தனிமையில் அமைந்துள்ள உணர்வையும் அனுபவிக்க உதவுகிறது. இந்த வெற்றிடமானது தனிமையை வழங்கும் அதேவேளை, மனைகளுக்கு போதியளவு சூரிய ஒளி மற்றும் சுத்தமான காற்றை வழங்குகின்றது.

இதன் கட்டுமானமானது இந்தத் துறையின் பெரும் நிறுவனமான MAGA Engineering இனால் முன்னெடுக்கப்படுவதுடன், இதன் உட்புற வடிவமைப்பானது Beteo Geneva இனால் வழிநடாத்தப்படும், சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட விருது வென்ற  IIDA International இனால் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த மனைகள், குறிப்பாக Duplex Penthouse மற்றும் Executive Suites ஆகியன கட்டுமானத் துறையில் தொழில்நுட்ப புதுமைக்கான எடுத்துக்காட்டாக திகழ்வதுடன்,  முற்றிலும் மனை தன்னியக்கம் (Home Automation) மற்றும் ஸ்மார்ட் கதவு பூட்டுகளைக் கொண்டது.

மனையின் ஆடம்பர பொருத்துதல்கள் மற்றும் வடிவமைப்புகளுக்கு மேலதிகமான, Prime Grand ஆனது 40,000 சதுர அடிக்கும் அதிகமான நிலப்பரப்பில் அமைந்துள்ள பொழுதுபோக்கு மற்றும் களியாட்டத்துக்கான பகுதியை தனது 332 மனைகளுக்காக கொண்டுள்ளது.

இது ஏனைய உயர்மட்ட வீட்டு மனைத் திட்டங்களுடன் ஒப்பிடும் போது பாரிய வேறுபாடாகும். முழுமையான உடற்பயிற்சிக் கூடம், 36 மீற்றர் நீளமான நீச்சல் தடாகம், சிறுவர்களுக்கான நீச்சல் தடாகத்துடன் கூடிய விளையாடுவதற்கான பகுதி, உலகத்தரம் மிக்க ஸ்பா, பட்மின்டன் மைதானம், பல்நோக்கு மண்டபம், மினி-மார்ட் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு நிலையம் போன்றன குடியிருப்பாளர்களுக்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளன. 32 ஆவது மாடியில் அமையவுள்ள 71 மீற்றர் நீச்சல் தடாகமானது இலங்கையின் மிக உயரத்தில் அமைந்துள்ள நீச்சல் தடாகமென பெயர் பெறவுள்ளதுடன், இது உணவகத்தையும் உள்ளடக்கவுள்ளது.

பொது போக்குக்கென பாரிய இடப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளமையால், எவ்வித நெரிசல் மற்றும் இடைஞ்சலுமின்றி நேரத்தை செலவிட முடியும். இதன்மூலம் பொதுபோக்குக்கென அர்ப்பணிக்கப்பட்ட இடம் வளாகத்தில் உள்ள அடுக்குமாடி மனைகளின் எண்ணிக்கைக்கு தேவைப்படுவதை விட அதிகமாகவே உள்ளமை சிறப்பம்சமாகும்.

24 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்துடன், Prime Group ரியல் எஸ்டேட் துறையில் இலங்கை சந்தையில் முன்னணி நிறுவனமாக வளர்ந்துள்ளது, இது வேகமான மற்றும் எப்போதும் வளர்ந்து வரும் சந்தையின் ஒவ்வொரு பிரிவிற்கும் சேவையை வழங்குவதோடு, ‘பூமியில் ஒரு சிறந்த இடத்தை உருவாக்குதல் என்ற அவர்களின் தூரநோக்கு பார்வைக்கு ஏற்றதாகவும் உள்ளது.

‘Property Guru Asia’வினால் இலங்கையின் சிறந்த கட்டிட நிர்மாண நிறுவனமென மகுடம் சூட்டப்பட்டுள்ளதோடு, Prime Group 2019 ஆம் ஆண்டு இலங்கையின் மிகவும் மதிக்கப்படும் நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இதுமட்டுமன்றி தொடர்ச்சியாக 5 ஆண்டுகளாக பணியாற்ற சிறந்த இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு Prime Grant மாடி மனைத் தொடரை சரியான நேரத்தில் ஒப்படைக்கும் பொருட்டும், மேன்மைக்கான அர்ப்பணிப்புடனுடம் Prime Group வலுவாக நிற்கிறது.


Add new comment

Or log in with...