சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 11 பேர் கைது | தினகரன்


சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 11 பேர் கைது

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 11பேர் இன்று புதன்கிழமை (06) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸாரும் கடற்படையும் இணைந்து சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 25தொடக்கம் 57வயதுகளை உடைய, சிலாபம், உடப்பு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், குறித்த 11பேரும் ஜீப் வண்டியொன்றில் ஒன்றாக பயணித்து படகின் மூலம் வெளிநாடு செல்ல முயற்சித்த போதே சிலாபம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 11பேரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிலாபம் தொடக்கம் முதுபந்திய வரையிலான கடல்மார்க்கமாக இவ்வாறு சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்வது கடந்த காலங்களில் அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர் - ஆர். றஸ்மின்)


Add new comment

Or log in with...