தேர்தல் முறைப்பாடுகள் மூவாயிரத்தை தாண்டியது | தினகரன்


தேர்தல் முறைப்பாடுகள் மூவாயிரத்தை தாண்டியது

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், தேர்தல் தொடர்பாக நேற்றையதினம் (06) பிற்பகல் 4.00 மணி வரை பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை  3,083ஆக அதிகரித்துள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் (06)  பிற்பகல் 4.00 மணி வரையான கடந்த 24 மணித்தியாலத்தில் 100  முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சட்டத்தை மீறியமை தொடர்பாக 98 முறைப்பாடுகளும் அடங்குகின்றன.  

தேசிய தேர்தல்கள் முறைப்பாட்டு மத்திய  நிலையத்திற்கு14  முறைப்பாடுகளும் மாவட்ட ரீதியான தேர்தல்கள் முறைப்பாட்டு விசாரணை நிலையங்களுக்கு 86 முறைப்பாடுகளும்கிடைத்துள்ளன.

வேட்புமனு தாக்கலையடுத்து கடந்த 08ஆம் திகதி முதல் நேற்று (06) வரையான காலப்பகுதியில் மொத்தமாக 3.083  முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதில் சட்டத்தை மீறியமை தொடர்பில் 2.959  முறைப்பாடுகளும் வன்முறைகள் தொடர்பில் 25 முறைப்பாடுகளும், 99 வேறு வகையான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...