தபால் வாக்கெடுப்பிற்கான இறுதித் தினம் இன்று | தினகரன்


தபால் வாக்கெடுப்பிற்கான இறுதித் தினம் இன்று

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பதற்கான இறுதி தினம் இன்றாகும் (07) என்பதோடு, தற்போது தபால்மூல வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த  ஒக்டோபர் 31, நவம்பர் 01, 04, 05, ஆகிய தினங்களில்  வாக்களிக்க தவறிய தபால்மூல வாக்காளர்கள் இன்று (07) மாலை 4.00 மணி வரை அந்தந்த மாவட்டச் செயலகங்களில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க அலுவலகங்கள் மற்றும் பாதுகாப்பு துறையில் தபால்மூல வாக்காளர்களுக்கான தபால்மூல வாக்களிப்பு  கடந்தஒக்டோபர் 31 மற்றும் நவம்பர் 01ஆம் திகதி முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாவட்டச் செயலகங்கள், தேர்தல்கள் அலுவலகம் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான தபால்மூல வாக்களிப்பு கடந்த 04ஆம், 05ஆம் திகதிகளில்முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேற்குறித்த நாட்களில் தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்கள், இன்றையதினம்  வாக்களிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

 


Add new comment

Or log in with...