வாள்வெட்டு தாக்குதல்களின் பிரதான சந்தேகநபர் சரண் | தினகரன்


வாள்வெட்டு தாக்குதல்களின் பிரதான சந்தேகநபர் சரண்

யாழ்ப்பாணத்தில் பல்வேறு வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் ஈடுபட்ட பிரதான சந்தேகநபராக கருதப்பட்ட ஆவா குழு வினோத் மல்லாகம் நீதிமன்றில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் பல வருட காலமாக ஆவா குழு என்ற அமைப்பினால், பல்வேறு வாள்வெட்டு தாக்குதல்கள் இடம்பெற்றதுடன் பல கொள்ளைச் சம்பவங்களும் இடம்பெற்றன. இக் குழுவின் பிரதான நபரென கருதப்பட்ட ஆவா வினோத், தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று நீதிமன்றில் சரணடைந்துள்ளார். அச்சுவேலிப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தின் குற்றவாளியாக கருதப்பட்ட இவர் அந்த வழக்கின் குற்றவாளியாக மல்லாகம் நீதிமன்றில் சரணடைந்துள்ளார். சரணடைந்த இவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏனைய குற்றங்களுடன் எந்தெந்த பொலிஸ் நிலையத்தில் வழக்கு விசாரணைகள் நிலுவையில் உள்ளன என்பது தொடர்பான அறிக்கைகள் அந்தந்த பொலிஸ் நிலையங்களினால் மல்லாகம் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்படுமென்றும் பொலிஸார்  குறிப்பிட்டனர்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்


Add new comment

Or log in with...