Home » தவக்கால சிந்தனை

தவக்கால சிந்தனை

சீடராவதற்கு ஏற்ற காலம்

by gayan
February 17, 2024 12:00 pm 0 comment

இயேசு செய்த பல விடயங்கள் வேறுபட்டதாகவும், வியக்கத் தக்கவையாகவும் இருந்தன. அவை பலருக்கு வருத்தத்தை கொணர்ந்தன. அவ்வாறான சம்பவங்களில் ஒன்றே இன்றைய நற்செய்தியாகும்.

இயேசு லேவியை தமது திருத்தூதராக தெரிவு செய்கிறார். கப்பர்நாகூமில் லேவியே இயேசுவுக்கு தேவையான கடைசி மனிதராக அவர்கள் எண்ணியிருக்கலாம். ஆனாலும் இயேசு அவரை தேர்ந்தெடுத்தார்.

லேவி என்பவர் காற்று வீசும் ஏரியில் நீண்ட குளிர்ந்த இரவுகளை கழித்த மீனவர்களாகிய பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் போன்ற கடின உழைப்பாளி அல்ல. அவர் சுங்கத்துறையில் அமர்ந்திருந்து துறைமுகத்துக்கு வரும் படகுகளுக்கு விரைந்து அவை கொண்டுவரும் பொருட்களை கணக்கெடுத்து அவற்றுக்கு வரி அறவிட்டு, அவற்றில் ஒருபகுதியை உரோமானிய படைகளுக்கும் மற்றப் பகுதியை தனது வருவாயாகவும் மாற்றிக்கொள்பவர்.

தமக்கான கட்டணத்துக்காக அதிக வரி வசூலிப்பது இவர்களின் தவிர்க்க முடியாத வழக்கமாகும். அடுத்தவர்களின் கேள்வியானது, மன்னிப்பை பற்றி எதிரிகளைஅன்பு செய்வது பற்றி, தேவையில் உள்ளவர்களுடன் பகிர்ந்துகொள்வது பற்றி, நற்செய்தி அறிவிப்பது பற்றி, நோயாளர்களை குணப்படுத்துவது பற்றி லேவிக்கு என்ன தெரியும்? அவனுக்கு ஒன்றுமே தெரியாது என்று பதிலளித்தார்கள்.

ஆயினும் இயேசு அவனது அறியாமை மற்றும் பொதிகளுடன் அவனை தேர்ந்தெடுத்தார்.

இப்போதும் அதே நமது அறியாமை மற்றும் பொதிகளுடன் இயேசு நம்மை தேர்ந்தெடுக்கின்றார். ஏனென்றால் அவர் நம்மை அன்பு செய்கிறார்.

நம்மை நம்புகிறார். நாம் எப்போதும் மாற முடியுமென அவர் நம்புகிறார். அவரது அருளால் நாம் கற்று வளர முடியுமென அவர் நம்புகிறார்.

இந்தத் தவக்காலம் நாம் இயேசுவின் உண்மையான சீடர்களாக மாறுவதற்கான சரியான நேரமாகும். மற்றவர்களிடமிருந்து நாம் பெற்றுச் செயல்படும் நமது சுங்கச்சாவடியினை விட்டு விட்டு நம்மிடம் உள்ளவற்றை அடுத்தவர்களுக்கு கொடுக்க, அதிலும் குறிப்பாக தேவையிலுள்ளவர்களுக்கு கொடுக்க கற்றுக்கொள்வோம்.

-அருட்தந்தை நவாஜி…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT