Samsung QLED 8K TV | தினகரன்


Samsung QLED 8K TV

Samsung QLED 8K TV

ஆடம்பர வீடுகளை இலக்காக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள சாம்சங்கின் QLED 8K டிவி தொலைக்காட்சி துறையில் ஒரு புதிய அத்தியாத்தை ஏற்படுத ;தியுள்ளது.

இது உண்மையான 8K தரம், 8K செயற்கை நுண்ணறிவு மேம்படுத்துதல், குவாண்டம் புரொசசர் 8K மற்றும் குவாண்டம் HDR வெளிப்படுத்துகை என பல அம்சங்களை உள்ளடகியுள்ளது.

Samsung QLED 8K TV

98 அங்குலம், 82 அங்குலம், 75 அங்குலம் மற்றும் 65அங்குலம் என மொத்தமாக நான்கு திரை அளவுகளை இந்த சாம்சங் QLED 8K டிவி கொண்டுள்ளது. 33 மில்லியன் பிக்சல்கள் உள்ள இவ்வகை தொலைக்காட்சிகள் அதிரடியான தரத்தில் ஒரு அதிவேக அனுபவத்தை வழங்குகிறது.

சாம்சங் அதன் குவாண்டம் புரொசஸர் 8K இல் செயல்படும் 8K செயற்கை நுண்ணறிவு மேம்படுத்துதல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஸ்ட்ரீமிங் சாதனங்கள், செட்-டாப் பாக்ஸில் பார்க்கும் அனைத்து வீடியோக்களையும் 8K தரத்தில் மேம்படுத்தி காண்பிக்கவும், செயற்கை நுண்ணறிவான AI இன்  உதவியுடன் படத்தின் தரம், பிரகாசம், ஒலியின் உள்ளடக்கம் என்பவற்றை மேம்படுத்தி வெளிப்படுத்துவதோடு

மாத்திரமன்றி குரல் வழி அறிவுறுத்தல்கள் (Voice Command) மூலம் இந்த தொலைக்காட்சிகளை அணுக கூகுள் அசிஸ்டன்ட் வசதி, சாம்சங்கின் பிரத்தியேக Bixby (விர்சுவல் அசிஸ்டன்ட்), iTunes திரைப்படங்கள் மற்றும் ‘அப்பிள் ஏர்-ப்லே 2’ வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...