மஞ்சள் நிற கோழி இறைச்சிகளில் போஷாக்கும் சுவையும் அதிகம் | தினகரன்


மஞ்சள் நிற கோழி இறைச்சிகளில் போஷாக்கும் சுவையும் அதிகம்

கலாநிதி கிரிஷாந்தி பிரேமரத்ன

சமநிலை கொண்ட உணவில் புரோட்டீன் மற்றும் உயிர்ச்சத்து அடங்கிய உணவுகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதுடன் சமூகத்தில் அநேகர் தமது புரோட்டீன் தேவையை பூர்த்தி செய்வதற்கு இறைச்சி அல்லது மீனை சாப்பிடுகின்றனர்.

இலங்கையில் மீன் விலை அதிகமாக காணப்படுகின்றது. பொதுமக்கள் தமது புரோட்டீன் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கான இலகுவான தீர்வாக கோழி இறைச்சி பாவனையே உள்ளது. மீன் மற்றும் ஏனைய இறைச்சிகளுடன் ஒப்பிடுகையில் கோழி இறைச்சியானது மக்களால் கொள்வனவு செய்யக்கூடிய விலையில் உள்ளதும், பண்ணையிலிருந்து வெகு விரைவில் வாடிக்கையாளரை வந்தடைவது போன்ற காரணிகள் கோழி இறைச்சி ஏனைய புரோட்டீன் உணவுகளை விட முன்னிலையில் உள்ளது.

கோழி இறைச்சி வாங்கும் சந்தர்ப்பங்களில் அது சற்று மஞ்சள் நிறத்தில் இருந்தால் அதனை கொள்வனவு செய்வதிலிருந்து வாடிக்கையாளர்கள் விலகுகின்றனர். கோழி இறைச்சி மஞ்சள் நிறமாவது ஏன்? அது வாடிக்கையாளர்களுக்கு உகந்தா? நாம் கொள்வனவு செய்யும் மஞ்சள் நிறை கோழி இறைச்சிகளிலுள்ள போஷாக்கு என்ன? அது உண்மையிலேயே வாடிக்கையாளர்கள் கோழி இறைச்சி கொள்வனவு செய்யும்போது இத்தகைய கேள்விகள் பல வாடிக்கையாளர்கள் மனதில் எழும்பலாம். உணவு பாதுகாப்பு நிபுணரும் வயம்ப பல்கலைக்கழத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி. கிரிஷாந்தி பிரேமரத்ன அந்தக் கேள்விகளுக்கு விடை அளிக்கின்றார்

இருந்தாலும் உரிய புரிந்துணர்வில்லாமல் வாடிக்கையாளர்கள் நிறத்தை அடிப்படையாக கொண்டு கோழி இறைச்சியை தேர்ந்தெடுக்கின்றனர். அத்துடன் சில சமயங்களில் அவர்கள் சரியானதை தேர்ந்தெடுக்க தவறுகின்றனர். மஞ்சள் நிறம் கொண்ட கோழி இறைச்சி புத்துணர்வானது அல்ல என்ற கருத்து அதற்கான சிறந்த உதாரணமாகும். மஞ்சள் நிற கோழி இறைச்சிகளே புத்துணர்வான மற்றும் உயர்த்தர இறைச்சிகள் என்ற கருத்து உலகில் பல நாடுகளை சேர்ந்தவர்கள் இடையே நிலவுகின்றது. இருந்தாலும் இலங்கை வாடிக்கையாளர்கள் மத்தியில் மஞ்சள் நிற கோழி இறைச்சி நல்லதல்ல என்ற மாற்று கருத்தே நிலவுகின்றது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த உணவு பாதுகாப்பு நிபுணரும் வயம்ப பல்கலைக்கழத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி. கிரிஷாந்தி பிரேமரத்ன கோழிகளுக்கு உணவாக வழங்கப்படும் சோளத்தில் அடங்கியிருக்கும் கரோட்டினாய்டு காரணமாக கோழி இறைச்சி மஞ்சள் அல்லது தங்க நிறமாக இருக்கின்றது என அவர் கூறினார்.


Add new comment

Or log in with...