டாப்ஸியின் படத்திற்கு வரி விலக்கு | தினகரன்


டாப்ஸியின் படத்திற்கு வரி விலக்கு

சிறு வயதிலேயே சாதிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். தள்ளாத வயதில் சாதிப்பது  அபூர்வம். உத்தரபிரதேசம் பாகபத் மாவட்டத்தை சேர்ந்த சகோதரர்கள் பிரகாஷி  டுமர், சந்த்ரோ டுமர். பிரகாஷிக்கு 82வயதும், சந்த்ரோவுக்கு 87வயதும்  ஆகிறது. துப்பாக்கியில் குறிபார்த்து சுடுவதில் வல்லவர்கள். இவர்களது பெயர்  சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இவர்களின் வாழ்க்கை  வரலாறு சாந்த் கி அங்க் பெயரில் இந்தியில் படமாக உருவானது. பிரகாஷி டுமர்  வேடத்தை டாப்ஸி ஏற்க, சந்த்ரோ வேடத்தை புமி பெட்னகெர் ஏற்றிருக்கிறார்.  சமீபத்தில் இப்படம் திரைக்கு வந்தது.

அதனை பிரகாஷி, சந்த்ரோ  இருவரும் தியேட்டருக்கு வந்து பார்த்தனர். இந்நிலையில் பிரகாஷி, சந்த்ரோ  இருவரையும் டாப்ஸி, புமி நேரில் சந்தித்து மனம்விட்டு பேசினர். அப்போது  பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டதுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.  சாந்த் கி அங்க் திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் டெல்லியில்  இப்படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.


Add new comment

Or log in with...