பல்கலை மாணவன் சடலமாக மீட்பு | தினகரன்


பல்கலை மாணவன் சடலமாக மீட்பு

பல்கலை மாணவன் சடலமாக மீட்பு-Jaffna University Medical Student Suicide

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட 4ஆம் வருட மாணவன் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியின் அறையிலிருந்து நேற்று (03)  மாலை மீட்கப்பட்டதாக, யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னாரைச் சேர்ந்த 26 வயதான, உடுகமகே டொமினியன் கியூமன் வில்பிரட் என்ற மாணவனே இவ்வாறு தனது உயிரை மாய்த்துள்ளார்.

மாணவன் தூக்கிட்டு இரண்டு நாள்கள் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

(யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன்)


Add new comment

Or log in with...