ஜோசப் ஒரு புரோஹிதன் | தினகரன்


ஜோசப் ஒரு புரோஹிதன்

இலக்கியம் எப்பொழுதும் நேர்மையானதாக இருக்க வேண்டும், அதே போல இலக்கியவாதிகளும் நேர்மையானவர்களாக இருக்க முயற்சிக்க வேண்டும், இவ்விரண்டு விடயங்களும் ஒன்றாக செயற்படுகின்ற போதுதான் அது சமூகப்படைப்பாக உணரப்படும். பன்முக வாசிப்பினைக் கொண்ட ஒரு படைப்பாளியிடம் மட்டுமே பிரதி தருகின்ற இன்பத்தினை நுகர முடியும்.

பரந்துபட்ட சிந்தனைத் தளத்தின் ஊடாக எழுதப்படும் பிரதியாக்கங்கள் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட வரைபடத்தினை வைத்து இயங்குவதில்லை.  

கேரளத்தில் பிறந்து சிறுகதை எழுத்துலகினில் அழிக்கப்பட முடியாத இடத்தினை தனக்கான தனிப் போக்காக வகுத்துக் கொண்ட பவுல் சக்கரியா புதினங்களின் நாயகனாவார்.

சலாம் அமெரிக்கா, ஓரிடத்து, ஆர்க்கறியாம், ஒரு நஸ்ராணியாவும் கௌளி சாஸ்த்ரவும், பாஸ்கரபேட்லரும் என்ற ஜீவிதவும், எந்துண்டு விசேஷம் பீலாத்தோச?, கண்ணாடி காண்மோளவும், சக்கறியுடெ கதைகள், ப்ரெய்ஸ் த லோர்ட், புத்தி ஜீவிகளெக் கொண்டு எந்த பிரயோஜனம்?, இஷ்டிகயும் ஆசாரியும், இதாணென்றெ பேர், ஜோசப் ஒரு புரோஹிதன், கோவிந்தம் பஜ மூடமதே, ஒரு ஆபிரிக்கன் யாத்ரா, அல்போன் சாம்மாயுடெ மரணவும் சவசம்ஸ்காராவும், உருளிக்குன்னத்தின்றெ லுத்தீனிய, பாஸ்கரபட்டேலர் அன்ட் அதர் ஸ்டோரீஸ் போன்ற ஏராளமான படைப்புக்களின் வெளியினூடாக வாசக மனதினில் கம்பீரமாய் உட்கார்ந்து கொண்டிருக்கும் எழுத்தாளன் எனில் அது பால் சக்கரியாவே. மலையாள வாழ்வின் விம்பங்களை அதன் யதார்த்த விளம்பல்களோடு முன்வைத்த படைப்பாளிகளுள் சக்கரியா மிக முக்கியமானவர். மலையாள உலகின் யதார்த்த வாழ்வியலினை தன்னுடைய கதைகளில் வைக்கம் முகம்மது பஷீர் எவ்வாறு வெளிப்படுத்தினாரோ அதுவே பிற்கால எழுத்தியலின் போக்காக மலையாள வாசகர்களுக்கு அமைந்தது.

இதிலிருந்து மாறுபடும் நவீன அடையாளத்தினை ட்டி.டி. ராமகிருஷ்ணன் தன்னுடைய படைப்புக்களின் மூலம் உலகிற்கு கொண்டு வந்தார். இவற்றினை தாங்கிய ஒரு மேம்பட்ட போக்கு சக்கரியாவின் கதைகளில் அமைந்திருப்பதினை நாம் நோக்க முடியும்... 

கேரள சாஹித்திய அகடமி விருது, கேந்த சாஹித்திய அகடமி விருது, ஒ.வி. விஜயன் விருது என இலக்கிய உலகின் மிக முக்கியமான விருதுகளை பெற்றுக் கொண்டார் சக்கரியா.

கதைகள் கொண்டியங்கும் மாய அலகினை உடைத்து கதை சொல்லல் போக்கினில் புதிய மாற்றத்தினை ஏற்படுத்திய சக்கரியாவின் கதைகள் மலையாள உலகின் காட்சிப் படிமங்களை எழுத்தியக்கத்தில் காட்டிய படைப்புக்களாகும். ஓரிடத்து படைப்பிற்காக கேரள சாகித்திய அகடமி விருது சக்கரியாவின் வசமாகியது. இலக்கியப் பரப்பினில் கதை சொல்லும் நுட்பத்தில் ஒரு உலகின் மைய அரசியலினூடே கதைக்கான களத்தினை உருவாக்கி அங்கு உணர்வுகளை விதைத்த பால் சக்கரியா கதை சொல்லலின் ஜாம்பவான்...  


Add new comment

Or log in with...