பட்டாசு வெடிக்கவில்லையென அருகில் சென்ற சிறுவன் பட்டாசு வெடித்து பலி | தினகரன்


பட்டாசு வெடிக்கவில்லையென அருகில் சென்ற சிறுவன் பட்டாசு வெடித்து பலி

பட்டாசு வெடிக்கவில்லையென அருகில் சென்ற சிறுவன் பட்டாசு வெடித்து பலி-Firecrackers Blast-14 Yr Old Dead

எரியாத பட்டாசு என நினைத்து அருகில் சென்ற சிறுவன் ஒருவன் குறித்த பட்டாசு வெடித்ததன் காரணமாக உயிரிழந்துள்ளார்.

கட்டானா, எட்டம்பகஹவத்தை ஶ்ரீ துமிந்தாராம விகாரையின் வருடாந்த பெரஹரவின் போது, வீதி வழியே பூ பட்டாசு போடப்பட்டு வந்துள்ளது.

இதன்போது, கட்டானா வடக்கு, கதிரானவில் உள்ள எட்டம்பகஹவத்தை பிரதேசம் வழியாக குறித்த பெரஹரா சென்றபோது, ஒரு அடி நீளமான பட்டாசுகளை சிறுவன் ஒருவர் நிலத்தில் வைத்து பற்றவைத்துள்ளார். குறித்த பட்டாசு வெடிக்காத நிலையில் மீண்டும் அதற்கு அருகில் சென்றுள்ளார். இதன்போது திடீரென பட்டாசு வெடித்து இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த மாணவர் நீர்கொழும்பு  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

கட்டானா வடக்கு, கதிரானாவில் உள்ள எட்டம்பகஹவத்தை 14 வயது ஜனித் டில்ஷான் எனும் மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டான பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...