மட்டு. தபால் வாக்கு சீட்டு ஆவணங்கள் தபால் திணைக்களத்தில் ஒப்படைப்பு | தினகரன்

மட்டு. தபால் வாக்கு சீட்டு ஆவணங்கள் தபால் திணைக்களத்தில் ஒப்படைப்பு

மட்டு. தபால் வாக்கு சீட்டு ஆவணங்கள் தபால் திணைக்களத்தில் ஒப்படைப்பு-Batticaloa Postal Vote Documents Handed Over to Postal Department

மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்க 11,522 பேர் தகுதி

2019 ஜனாதிபதித்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்களிப்பவருகளுக்கான வாக்கு சீட்டுக்களடங்கிய ஆவணங்கள் தபால் திணைக்களத்துக்கு ஒப்படைக்கும் பணிகள் இன்று (18) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட தெரிவு அத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான மாணிக்கம் உதயகுமார், உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசிலன் ஆகியோரின் மேற்பார்வையில் நடைபெற்றன.

மட்டு. தபால் வாக்கு சீட்டு ஆவணங்கள் தபால் திணைக்களத்தில் ஒப்படைப்பு-Batticaloa Postal Vote Documents Handed Over to Postal Department

மாவட்ட செயலகத்தில் 20 அறைகளில் இந்த தபால் பொதி பாரமரிக்கும் பணிகள் தேர்தல் கடமை உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறு பொதியிடப்பட்ட தபால் வாக்குசீட்டுகள் அடங்கிய ஆவணங்கள் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நிறுவப்பட்டுள்ள மட்டக்களப்பு பிரதம தபாலக தற்காலிக கிளையில் பிரதம தபால் அதிபர் கே.சுகுமார்  தலைமையிலான தபால் ஊழியர் குழுவினரால் பொறுப்பேற்கப்பட்டன.

மட்டு. தபால் வாக்கு சீட்டு ஆவணங்கள் தபால் திணைக்களத்தில் ஒப்படைப்பு-Batticaloa Postal Vote Documents Handed Over to Postal Department

இவ்விதம் பொறுப்பேற்கப்பட்ட தபால்மூலவாக்களிப்பு வாக்குசீட்டு பொதிகள் இன்று இரவு தரம்பிரிக்கபட்டு நாளை காலை இம்மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களத்தின் பொலிஸ் மற்றும் முப்படை முகாம்களில் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்படுமென மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்க 11,522 பேர் தகுதி பெற்றிருப்பதாகவும் அரச திணைக்களங்களினால் தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதியும் மறுநாள் நவம்பர் 01 ஆம் திகதியும் நடாத்தப்படவுள்ளது.

மட்டு. தபால் வாக்கு சீட்டு ஆவணங்கள் தபால் திணைக்களத்தில் ஒப்படைப்பு-Batticaloa Postal Vote Documents Handed Over to Postal Department

பொலிஸ் மற்றும் முப்படை உத்தியோகத்தர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் நவம்பர் 04ஆம், 05 ஆம் திகதிகளிலும் அவ்வப்பாதுகாப்பு படைமுகாம்களிளும் அன்றைய தினம் தவறுவோருக்கு நவம்பர் மாதம் 7ஆம் திகதியும் மாவட்ட தேர்தல்  அலுவலகத்திலும் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் தெரிவத்தாட்சி அலுவலர் உதயகுமார் மேலும் தெரிவித்தார். 

(மட்டக்களப்பு  சுழற்சி நிருபர் - பி. அப்துல் லதீப்)

Add new comment

Or log in with...