தபால் மூல வாக்களிப்புக்கு 7 இலட்சம் விண்ணப்பங்கள் | தினகரன்


தபால் மூல வாக்களிப்புக்கு 7 இலட்சம் விண்ணப்பங்கள்

இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கு சுமார் 7 இலட்சம் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக. தேர்தல்கள் ஆணையகத்தின் பணிப்பாளர் (திட்டமிடல்) சன்ன பீ. டி சில்வா தெரிவித்தார்.

தபால் மூல விண்ணப்பங்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், தகுதிகளை பூர்த்தி செய்யாத மற்றும் முழுமையாக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.

தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி உடையவர்களின் எண்ணிக்கையை விண்ணப்பங்களை பரிசீலித்த பின்னரே குறிப்பிடலாம் எனவும், அதற்கு ஓரிரு தினங்கள் எடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கு, இம்மாதம் 31 மற்றும் நவம்பர் 01 ஆகிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அநுராதபுர  மாவட்டத்தில்  தபால் மூல வாக்குப்பதிவுக்காக  விண்ணப்பித்த  விண்ணப்பங்களில்  6000  விண்ணப்பப்படிவங்கள்  நிராகரிக்கப்பட்டுள்ளதாக  அநுராதபுரம்  மாவட்ட   அரசாங்க  அதிபர்  ஆர்.எம்.வன்னினாயக்க  தெரிவித்திருந்தார்.

தகுதி பெற்ற  அரசாங்க ஊழியர்கள் எதிர்வரும் ஒக்டோபர் 31, நவம்பர் 01 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என்பதோடு, 
பொலிஸ் மற்றும் முப்படை உத்தியோகத்தர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் நவம்பர் 04ஆம், 05ஆம் திகதிகளிம் அவ்வப்பாதுகாப்பு படைமுகாம்களிளும் அன்றைய தினம் தவறுவோருக்கு நவம்பர் மாதம் 7ஆம் திகதியும் மாவட்ட தேர்தல்  அலுவலகத்திலும் வாக்களிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்கும் கால எல்லை செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் முடிவடையும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலநிலை மாற்றம் காரணமாக நாட்டில் சில பகுதிகளில் வெள்ளம் கடும் மழை, ரயில்வே வேலை நிறுத்தம், ஆசிரியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக ஒக்டோபர் 04 ஆம் திகதி நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டது.


Add new comment

Or log in with...