தபால் வாக்கு விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு | தினகரன்


தபால் வாக்கு விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

தபால் வாக்கு விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு-Postal Voting Date Extended

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஒக்டோபர் 04 ஆம் திகதி வரை நீடிக்க தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

இன்றைய தினம் (30) தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் கூட்டத்தில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் வாக்குக்கான விண்ணப்பங்கள் 18 ஆம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடையவிருந்தது.

நவம்பர் 16 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் கடந்த செப்டெம்பர் 18 ஆம் திகதி முதல் கோரப்பட்டது.

தகுதி பெற்ற  அரசாங்க ஊழியர்கள் எதிர்வரும் ஒக்டோபர் 31, நவம்பர் 01 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என்பதோடு, தேர்தல்கள் செயலகம் மற்றும் பொலிஸ் திணைக்களத்தை சேர்ந்தோர் எதிர்வரும் நவம்பர் 04ஆம், 05 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...