நீரிழ் மூழ்கியவர் பொலிஸாரினால் மீட்பு | தினகரன்


நீரிழ் மூழ்கியவர் பொலிஸாரினால் மீட்பு

நீரிழ் மூழ்கியவர் பொலிஸாரினால் மீட்பு-Youth Rescued Drown at Nilaveli Beach by Police Constables

நிலாவெளி கடலில் மூழ்கிய நபர் ஒருவர் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.

உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிலாவெளி கடலில் நீராடிக் கொண்டிருந்த குறித்த இளைஞர் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அப்பகுதியில் உயிர் காப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

நேற்று (27) பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, கான்ஸ்டபிள்களான, ரூபசிங்க (57455), திஸாநாயக்க (87326) ஆகியோரினால் குறித்த நபர் காப்பாற்றப்பட்டு, முதலுதவி வழங்கப்பட்டு, பின்னர் திருகோணமாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் 21 வயதான கட்டுபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Add new comment

Or log in with...